உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோயில் கட்டுமான பணிகளால் ரூ.400 கோடி ஜி.எஸ்.டி., கிடைக்கும்

ராமர் கோயில் கட்டுமான பணிகளால் ரூ.400 கோடி ஜி.எஸ்.டி., கிடைக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார்: ''அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வாயிலாக, அரசுக்கு ஜி.எஸ்.டி., வரியாக, 400 கோடி ரூபாய் கிடைக்கும்,'' என, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோயிலில், கடந்த ஜன., 22ல், பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. இந்த கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோயில் வளாகத்தில் பல்வேறு கடவுள்களுக்கும் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. சிவ லிங்கத்தை தேர்வு செய்வதற்காக, மத்திய பிரதேசத்தின் இந்துாருக்கு, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் சென்றுள்ளார்.இந்நிலையில், இந்துாரில் நடந்த நிகழ்ச்சியில் சம்பத் ராய் கூறியதாவது: ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வாயிலாக, அரசுக்கு ஜி.எஸ்.டி., வரியாக, 400 கோடி ரூபாய் கிடைக்கும். 70 ஏக்கரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த வளாகத்தில், மொத்தம் 18 கோயில்கள் கட்டப்படும். இதில் மகரிஷி வால்மீகி, ஷப்ரி, துளசிதாஸ் கோயில்களும் அடங்கும். 100 சதவீதம் வரி செலுத்துவோம். ஒரு ரூபாய் கூட குறைத்து கணக்கு காட்ட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
செப் 11, 2024 18:18

அங்கு இதே செலவில் மசூதி கட்டியிருந்தாலும் இவ்வளவு ஜி எஸ் டி வசூல் ஆகி இருக்கும்!


elanchezian
செப் 11, 2024 11:04

எங்கள் தமிழ் புலவர் இராமகாதை எழுதிய கவிச்சாக்காரவர்த்தி கம்பர்க்கும் சிலை வேண்டும்


Sampath Kumar
செப் 11, 2024 09:39

காதில் பூ உற்றாதீர்கள்


கார்த்திகேயன்
செப் 11, 2024 08:50

மக்களிடம் வாங்கும் tax 70%... திருப்பி கொடுப்பது ஆயிரம் ரூபாய் அதுவும் ஒரு சிலருக்கு மட்டும்..


Velan Iyengaar
செப் 11, 2024 08:09

ஒழுகாமல் ஒழுங்கா கட்டினால் GST அதிகமா வாங்குவார்களா என்ன ???


Velan Iyengaar
செப் 11, 2024 08:08

GST உள்ளே வராமல் அடிக்கப்படும் பணத்துக்கு ????


அரசு
செப் 11, 2024 06:59

இராமர் கோவில் கட்டுவதால் பக்தி அதிகம் ஆவது முக்கியமா GST கிடைப்பது முக்கியமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை