உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணல் கடத்தலுக்கு ரூ.47 கோடி அபராதம்

மணல் கடத்தலுக்கு ரூ.47 கோடி அபராதம்

பெங்களூரு; 'மணல் கடத்தியதற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 7,629 வழக்குகள் பதிவாகி, 47 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது,'' என, மேல்சபையில் அமைச்சர் மல்லிகார்ஜுன் தெரிவித்தார்.மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் தனஞ்செய சர்ஜி கேள்விக்கு, பதிலளித்து சுரங்கம், தோட்டக்கலைத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் பேசியதாவது:கர்நாடகாவில் மணல் கடத்தியதற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் 7,629 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதற்காக 47 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் 2023 - 24ல், 24 லட்சத்து 10 ஆயிரத்து 236 மெட்ரிக் டன் மணல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், 35.68 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.மணல் கடத்தலைத் தடுக்க, மாவட்ட கலெக்டர் தலைமையில் மணல் கடத்தல் தடுப்பு படை கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை