உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ. 5 லட்சம் கோடி போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ்

ரூ. 5 லட்சம் கோடி போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலத்தில் மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் காணவில்லை என பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (மே 01) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், 4 வாரங்களில் மத்திய நிதி அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

zing thing
மே 02, 2024 19:26

வருடம் முன் டு டன் தங்கம் டெல்லியில் ரெய்டு செய்துவிட்டு இது நாள் வரை அதற்கு விடை கூறிட முடியாது


R KUMAR
மே 01, 2024 21:33

வெட்கமாக உள்ளது


Velan Iyengaar
மே 01, 2024 19:40

இந்த துறைக்கு குஜராத் பின்னணி கொண்ட ஆட்களுக்கு மேலிருந்து கீழே வரைக்கும் பணியில் கொண்டு வந்து சேர்க்கும்போதே இதை எதிர்பார்த்தோம் அப்படியே நடக்குது.


Velan Iyengaar
மே 01, 2024 19:34

வெளியே விடப்பட்ட போதை பொருளின் மதிப்பில் ஆளும்கட்சிக்கு எவ்ளோ பங்கு போனது ?? ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களுக்கு எவ்ளோ பங்கு போனது ??


Velan Iyengaar
மே 01, 2024 19:32

இப்போ சொல்லுங்க ஒன்றிய கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பறிமுதல் செய்யப் பட்ட போதை பொருள் எல்லாம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்துக்குள்ளே இறக்கி விட்டு மாநிலத்தின் பெயரை சீர்குலைக்கும் இந்த கேடுகெட்ட செயலுக்கு ஜூன் நாலாம் தேதி மக்கள் முடிவு கட்டுவார்கள்


Mohan
மே 01, 2024 19:00

விடியல் காங்கிரஸ் சதியில் வழக்கு போடும் இந்த நபரின் பிண்ணனி என்ன ? உடனே விடியலின் பிச்சை பொறுக்கிகளான சமூக வலைதள சம்பள ஆட்கள் உடனே முழித்து கொண்டு ஜாபர் சாதிக் விவகாரத்தில் போல ஏமாறாது இருக்கும்படி மேலிடத்தில் சொன்னபடி பாஜக ஆட்கள் மற்றும் அண்ணாமலை மீது விழுந்து பிராண்டி வைக்க தயார் செய்து கொண்டு இருப்பார்கள்


J.V. Iyer
மே 01, 2024 18:09

பிடிக்கவேண்டியது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கட்சியை அவிங்கதான் ஆட்டைய போட்டிருப்பாங்க


spr
மே 01, 2024 17:32

சொன்னதுவும் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுவும் ஒரு "பத்திரிகையாளர் அரவிந்தாக்சன்" என்றால் அவருக்கு இது எப்படித் தெரியும் என்றல்லவா நீதிபதிகள் கேட்டிருக்க வேண்டும்?\


krishnamurthy
மே 01, 2024 18:28

சரியே


venugopal s
மே 01, 2024 16:36

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாகி விட்டது என்று பாஜகவினர் கூச்சல் போடும் போதே நினைத்தேன் இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று!


venugopal s
மே 01, 2024 16:34

தேர்தல் செலவுக்கு பணம் வேண்டாமா?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ