உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை நடை நாளை திறப்பு

சபரிமலை நடை நாளை திறப்பு

சபரிமலை:திருவோணம் பண்டிகையும், புரட்டாசி மாத பூஜையும் சேர்ந்து வருவதால், சபரிமலை நடை இந்த மாதம் எட்டு நாட்கள் தொடர்ச்சியாக திறந்திருக்கும். நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து வேறு விசேஷ பூஜைகள் நடைபெறாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். செப்., 14 அதிகாலை 5:00-க்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன், அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்து நெய்யபிஷேகத்தை துவக்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் திருவோண சிறப்பு பூஜைகளும் துவங்கும்.இரவு 7:00 மணிக்கு பிரசித்தி பெற்ற படி பூஜை நடைபெறும். செப்., 22 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ