உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலர் சேர்க்கப்படாமல் உணவுகள் விற்பனை

கலர் சேர்க்கப்படாமல் உணவுகள் விற்பனை

தங்கவயல்: தங்கவயலில் நகராட்சி நடத்திய அதிரடி சோதனைக்கு பின் செயற்கை வண்ணம் சேர்க்கப்படாமல் சிக்கன் கபாப் உட்பட பலவகை உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.உணவில், செயற்கை வண்ணங்கள் எனும் சிந்தடிக் கலர் சேர்க்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் தடை விதித்தது. உணவில் செயற்கை சாயங்கள் கலப்பில், 'ரோட்டமைன் பி' எனும் வேதியியல் பொருள் இருப்பதால் புற்றுநோயை ஏற்படுத்தும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆயினும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிக்கன் வகை உணவுகள், இனிப்பு வகைகள், கோபி மஞ்சூரியன், பானி பூரி என பலவற்றில், பலவிதமான நிறம் சேர்க்கப்படுகின்றன.இதையடுத்து, கடைகளில் தங்கவயல் நகராட்சி ஆணையர் பவன் குமார் சோதனை நடத்தி அவைகளை பறிமுதல் செய்தார். வேதியியல் கலவை பாட்டில்கள், உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கவயலில் ஒன்பது கடைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இதன்பின், செயற்கை வண்ணம் சேர்க்காமல், சிக்கன் கபாப் உட்பட உணவு வகைகள் தங்கவயலில் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ