உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செயற்கை நிறமூட்டி கலந்த கபாப், ஜிலேபி பறிமுதல்

செயற்கை நிறமூட்டி கலந்த கபாப், ஜிலேபி பறிமுதல்

தங்கவயல்: தங்கவயலில் சிக்கன் கபாப், மற்றும் இனிப்பு வகைகள் மீது செயற்கை நிறமூட்டி சேர்க்க அரசு தடை விதித்துள்ளது.அதை மீறி செயற்கை நிறமூட்டி கலந்து, விற்பனை செய்த தின்பண்டங்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கவர்ச்சியை ஏற்படுத்த,வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில்செயற்கை நிறமூட்டியை கலந்துசிக்கன் கபாப், சிக்கன் ரோல், மற்றும் ஜிலேபி ஆகியவை தயாரித்து விற்பனை செய்தனர்.தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுடன் சென்று செயற்கை நிறமூட்டி கலந்த சிக்கன் கபாப், ஜிலேபி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.“இது மீண்டும் தொடர்ந்தால், வர்த்தக கடை உரிமம் ரத்து செய்யப்படும், அபராதம் விதிக்கப்படும்,” என,நகராட்சிசுகாதார பிரிவு அதிகாரிசரஸ்வதி எச்சரிக்கை விடுத்தார்.1.7.2024 / ஜெயசீலன்2_DMR_0004தடையை மீறி செயற்கை நிறமூட்டி கலந்த ஜிலேபிகள், நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி சரஸ்வதி முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டன. இடம்: தங்கவயல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை