உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விளம்பரம் செய்ய சுயச்சான்று அவசியம்

விளம்பரம் செய்ய சுயச்சான்று அவசியம்

புதுடில்லி: பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய சுயச்சான்று ஜூன் 18 முதல் கட்டாயமாக்கப்படுகிறது. தவறான வழிகாட்டுதலை தவிர்க்கவும், நுகர்வோர்கள் பாதிக்கப்படாமல் இருக்க இது வழிவகை செய்யும் என சுப்ரீம்கோர்ட் கூறியுள்ளது. போலி விளம்பரங்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், தவறான வழியை காட்டவும் முயற்சிக்கும் விளம்பரத்திற்கு கடிவாளம் போட வேண்டும் என்ற நோக்கில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட் கடந்த மே மாதம் 7 ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி விளம்பர தாரர்கள், விளம்பர ஏஜன்ஸிகள் தங்களின் சுயச்சான்றை சமர்ப்பிக்க வேண்டும். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் மீடியாக்களில் விளம்பரம் செய்ய இது மிக அவசியம் ஆகும்.

இணையதளத்தில் பதிவேற்றம்

இது வரும் 18 ம் தேதி முதல் இது கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான சுயச்சான்றை மத்திய அரசின் பிரஸ்கவுன்சில் இணைய தளத்தில் cbcindia.gov.in/cbc/advt-login பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Murali Krishnan
ஜூன் 17, 2024 13:32

நான் எதிர்பார்த்த செயல் இதுவே, பல்வேறு விளம்பரங்கள் தங்களின் உத்தியை கையாள இது முற்றுப்புள்ளி வைக்கிறது. இதன் முலம் தரமான பொருட்கள், நம்பிக்கைக்குரிய நிறுவனம், தயாரிப்பு நிறுவனத்திற்கும் பயனாளர்களுக்கும் ஒரு பாலமா திகழ வழி வகுக்கும். அந்த சுயசான்றும் தனிப்பட்ட முறையில் பயனாளிகள் கவனிக்கும் வண்ணம் இருந்தால் மேலும் சிறப்பு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை