உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தனித்து போட்டி: மாநில பா.ஜ., அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தனித்து போட்டி: மாநில பா.ஜ., அறிவிப்பு

புதுடில்லி : ஜம்முகாஷ்மீர் தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட போவதாகவும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்காது என மாநில பா.ஜ., தலைவர் தெரிவித்து உள்ளார். இது குறித்து மாநில பா.ஜ., தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்கு கட்சி முழுமையாக தயாராகிவிட்டது, வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் .ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் பாஜக தேர்தலுக்கு முன் கூட்டணி வைக்காது.அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 8 முதல் 10 சுயேச்சை வேட்பாளர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விவாதங்கள் நிறைவேறினால், கூட்டாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகம் வகுப்போம் என்றார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக அங்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் செப்., 3 மற்றும் செப்.,10 அக்.,1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்., 4-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
ஆக 19, 2024 04:31

இது தமிழகத்திற்குlம் விடப்பட்ட சவால். ஆதலால் தமிழகத்திலுள்ள பொறுப்பற்ற அரசியல்வாதிகள் இனிமேல் கொஞ்சம் பார்த்துப் பேச வேண்டும். கொஞ்சம் நாகரீகமாக நல்லவார்த்தைகளால் பேசினால் போதும்


Sathyanarayanan Sathyasekaren
ஆக 19, 2024 03:53

காஷ்மீர் மக்களின் சுய ரூபம் தெரியவரும், காஷ்மீரின் வளர்ச்சியா? மீண்டும் கல் எறியும் வேலையா என்று.


Narayanan Muthu
ஆக 18, 2024 21:27

கூட்டணிக்கு யாரும் தயாராக இல்லை போலும். அதனால்தான் சுயேச்சை பின்னால் வால் பிடிக்க ஓடுகிறார்கள். துஷ்மன் சே தூர் எனும் பொது கருத்தில் மற்ற கட்சிகள் உள்ளன போலும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ