உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது; விதி மீறியதால் கடும் நடவடிக்கை

இந்தியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; மல்யுத்த வீராங்கனையின் சகோதரி கைது; விதி மீறியதால் கடும் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து இந்திய வீராங்கனை மற்றும் அவரது பயிற்சியாளர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டிம் பங்கல்

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டதால், அவருக்குப் பதிலாக மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் கலந்து கொண்டார். நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை ஜெய்நெப் யெட்கில்லிடம் எதிராக 10-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். அறிமுக ஒலிம்பிக் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த அண்டிம் பங்கலுக்கு, நேற்று மறக்க முடியாத மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கைது

போட்டி நடைபெறும் இடத்திற்கு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் நிலையில், அனுமதியை மீறி அவரது தங்கை நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஆண்டிம் பங்கலின் சகோதரியை பாரிஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர், எச்சரிக்கை செய்து அவரை விடுவித்தனர்.

வெளியேற்றம்

இதனிடையே, ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இந்திய வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினருக்கான அங்கீகாரத்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்தது. இதனால், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.இதையறிந்த மத்திய அரசு, பங்கல், அவரது பயிற்சியாளர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Manickam Ela
ஆக 09, 2024 19:53

நேர்மை எளிமை நமது தேசம் தேசம் தேய்கிறது


Manickam Ela
ஆக 09, 2024 19:50

நேர்மை எளிமை. நமது தேசம் தேசம் தேய்கிறது


SUN Mohan
ஆக 08, 2024 20:29

Please less her uniform then check her weight ........


BALASUBRAMANIAN IYER
ஆக 08, 2024 15:33

அருமையான பதிவு


Iniyan
ஆக 08, 2024 13:29

இந்த பாரிஸ் ஒலிம்பிக் எனக்கு என்னவோ சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு எண்ணம்


Velan Iyengaar
ஆக 08, 2024 12:28

இதுக்கெல்லாம் மோடி காரணம் இல்லை .. நேரு தான் காரணம்


ganapathy
ஆக 08, 2024 13:11

நீதான்யா காரணம்.


Aroul
ஆக 09, 2024 11:09

உண்மை நமது எம்பி எம்மெல்லேக்கள் குடும்பத்துடன் அரசு செலவில் வெளிநாடு செல்வது நேரு காலம் தொட்டு நடக்கிறது.


nagendhiran
ஆக 08, 2024 11:41

விதி மீரல் எல்லாம் நமக்கு சகஜம்? வெளிநாட்டில் அப்படி இல்லை? குற்றம்"குறை சொல்லாமல்"சட்டத்திற்கு உட்பட்டு நாமதான் நடக்குனம்? இது இந்தியர்களுக்கான பாடம்?


Swaminathan L
ஆக 08, 2024 11:33

அவர்கள் ஏற்கனவே நாடு திரும்ப வேண்டியவர்கள் தான். 0-10 என்று அந்திம் பெற்றது ஆச்சரியம் தான். போட்டியிட்ட லட்சணத்திற்கு 0 க்கு கீழே நெகடிவ் பத்து பாயிண்டுகள் தான் வழங்கியிருக்க வேண்டும்.


thamilan
ஆக 08, 2024 11:16

நம் நாட்டின் பெயரை கெடுக்கும் இது போன்றவர்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்


nv
ஆக 08, 2024 09:53

நம்ம ஆட்கள் எல்லா இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணம் தான் இதெற்கெல்லாம் அடிப்படை. நம்ம ஊரில் ration கடையில் 100/ 200 gm குறைவாகவே வாங்கி பழக்கப்பட்ட தால், வெறும் 100gm தானே அதிகம் எல்லாம் ok, என்ற மனப்பான்மை,!! இன்று உலக நாடுகளின் முன் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.. இதற்க்கு நம்முடைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் ஒரு தவறான முன்னுதாரணம்.. நாம் எந்த சட்டத்தையும் மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று இன்றய சமுதாயம் தவறாக நினைக்க துவங்கி விட்டது..


மேலும் செய்திகள்









புதிய வீடியோ