உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துாங்குவதை போட்டோ எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு

துாங்குவதை போட்டோ எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு

இந்துார் : மத்திய பிரதேசத்தில் பணியின் போது துாங்கியதை புகைப்படம் எடுத்த சக ஊழியரை, துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் நேற்று கைது செய்தனர். மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள பன்வார்குவான் பகுதியில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரமோத் பாண்டே, 56, என்பவர் பாதுகாவலராக வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி இரவு பணியில் இருந்த போது, இவர் துாங்கியுள்ளார். இதை, நகைக் கடையின் விற்பனை பிரிவில் பணியாற்றும் சஞ்சய் ஜக்தப் என்பவர் தன் மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். இந்த படத்தை சக ஊழியர்கள் உள்ள வாட்ஸாப் குழுவிலும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பிரமோத், நேற்று முன்தினம் நகைக் கடையில் பணியில் இருந்த சஞ்சயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் முடிவில், தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரை சுட்டார்.இதில், கை மற்றும் உடலின் பிற பாகங்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சஞ்சய் சேர்க்கப்பட்டார். சஞ்சய் அளித்த புகாரைத் தொடர்ந்து, பிரமோத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி