உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா?- அமித்ஷா

ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா?- அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா?' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: கூடாரத்தில் இருந்த ராமருக்கு பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி கட்டியுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. ஊழல்வாதிகளை சிறையில் அடைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தோம். ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க கூடாதா?. கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.,மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெறும் என்றார்.பிரதமர் மோடிக்கு நாட்டு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்புவதில் மாநில அரசு தாமதம் காட்டுகிறது. லோக்சபா தேர்தலில் ஒரு பக்கம் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது. மறுபுறம் ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் இண்டியா கூட்டணியினர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Azar Mufeen
ஏப் 02, 2024 22:26

சுரங்க ஊழல் நாயகன் எடியூரப்பா வெளியிலதானே இருக்கிறார்


K.n. Dhasarathan
ஏப் 02, 2024 21:29

அப்படியே பின்னால் திரும்பி பாருங்கள் உங்கள்பாதி எம் பி க்கள் உள்ளேதான் தள்ள வேண்டி வரும் பரவாயில்லையா?


venugopal s
ஏப் 02, 2024 21:18

ஊழல்வாதிகளோடு சேர்த்து குஜராத் கலவர கொலைகாரர்களையும் சிறையில் அடைத்தால் நன்றாக இருக்குமே!


Ramesh Sargam
ஏப் 02, 2024 20:01

சிறைகள் இருப்பதே ஊழல்வாதிகளை அடைக்கத்தான் எல்லா ஊழல்வாதிகளையும் பிடித்து அடையுங்கள்


spr
ஏப் 02, 2024 17:58

இதே கேள்வியைத்தான் நாங்களும் கேட்கிறோம் இதுவரையில் யாராவது ஒருவரையாவது சிறையில் அடைத்திருக்கிறீர்களா? அண்மையில் உருவான குற்றம் ஒப்புக் கொண்டவர் , சிறையில் இருந்தும் இலாகா இல்லாத சட்ட அமைச்சராக இருப்பதையோ அல்லது சிறையில் இருந்தே முதல்வராக இருப்பேன் என்ற சட்ட நிர்வாக பிரச்சினையைச் சீர் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வந்தீர்களா அரசியல்துறைப் பேராசிரியரான ஊழல் என்பது, தனிப்பட்ட நலங்களுக்காகப் பொது அதிகாரத்தைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதாகும்


முருகன்
ஏப் 02, 2024 17:46

உங்கள் கூட்டாளிகள் கட்சி ஊழலையும் விசாரிக்க வேண்டும் அப்படி செய்தால் மக்கள் நம்புகிறார்கள்


mindum vasantham
ஏப் 02, 2024 16:58

under dealing thaane nee


RAAJ68
ஏப் 02, 2024 16:47

தமிழகத்தில் உள்ள ஊழல்வாதிகளை ஏன் சிறையில் அடைக்க வில்லை. ஜெகத்ரட்சகன் இடம் இருந்தும் ஏவா வேலு அலுவலகங்களில் இருந்தும் பண மூட்டைகளை பறிமுதல் செய்தீர்கள் ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது எதற்காக. துரைமுருகன் 60 ஆயிரம் கோடி மணலில் கொள்ளையடித்ததாக அவருடைய கட்சிக்காரனே பேசி உள்ளார். உதயநிதியும் சபரீசனும் முப்பதாயிரம் கோடி ஊழல் செய்வதாக பழனிவேல் ராஜன் கூறினார். ஐ பெரியசாமி கே என் நேரு இன்னும் பலர் பண மூட்டைகளை கொள்ளையடித்து வைத்துள்ளனர் என்பது எல்லோரும் பேசிக் கொள்கின்றனர். ஜி ஸ்கொயர் சோதனையை பாதியிலேயே நிப்பாட்டியது ஏன் என்ன நிர்பந்தம் . எல்லாமே மர்மமாக உள்ளது மக்களுக்கு மத்திய அரசு பதில் கூறியே ஆக வேண்டும்.


Suppan
ஏப் 02, 2024 16:31

நாங்க முப்பதாயிரம் கோடி அடிச்சாலும் எங்களை கேட்கக்கூடாது


தமிழ்
ஏப் 02, 2024 18:59

நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. உங்களை யார் தடுத்தது.


Srinivasan Krishnamoorthi
ஏப் 02, 2024 16:23

அதிகபட்சம் நாட்களில் தண்டனை வழங்க வைக்க வேண்டும் வழக்குகள் பல வருடங்கள் நடப்பது அஜித் தோவல் கைகள் கட்டப்பட்ட நிலை நீங்க வேண்டும் PoK உடனே இணைக்கப்பட வேண்டும்


மேலும் செய்திகள்