உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவலிங்கே வுடாவுக்கு அமைச்சர் பதவி: இலக்கு நிர்ணயித்தார் சித்தராமையா

சிவலிங்கே வுடாவுக்கு அமைச்சர் பதவி: இலக்கு நிர்ணயித்தார் சித்தராமையா

ஹாசன்: லோக்சபா ஓட்டுப்பதிவு நெருங்கும் நிலையில், அரசிகெகே காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடாவுக்கு, முதல்வர் சித்தராமையா தேர்தல் பரிசு அறிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வுக்கும், கவுரவ பிரச்னையாக உள்ளது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. குறிப்பாக மாண்டியா, ஹாசன் தொகுதிகளை காங்கிரஸ் குறி வைத்துள்ளது. ஹாசன் லோக்சபா தொகுதியில், ஸ்ரேயஷ் படேலை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. இங்கு பா.ஜ., கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவை தோற்கடிக்க, முதல்வர் சித்தராமையா உறுதிபூண்டுள்ளார்.காங்., வேட்பாளரை வெற்றி பெற வைத்தால், அரசிகெரே எம்.எல்.ஏ., சிவலிங்கே கவுடாவை அமைச்சராக்குவதாக, முதல்வர் ஆசை காண்பித்துள்ளார்.அது மட்டுமின்றி, அரசிகெரே தொகுதிக்கு நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்து, கையெழுத்திடுவதாகவும் முதல்வர் உறுதி அளித்துள்ளார். நேற்று முன்தினம் ஹாசனில், காங்., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த சித்தராமையா, சிவலிங்கே கவுடாவிடம் பகிரங்கமாகவே, “நீங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள். உங்களை அமைச்சராக்குவது என் பொறுப்பு,” என, உறுதி அளித்தார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ