மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
ஹூப்பள்ளி: ''முதல்வர் சித்தராமையாவின் அரசு ஊழல் நிறைந்தது,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சித்து உள்ளார்.ஹூப்பள்ளியில், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டி:மூடாவில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் ஊழல் நடக்கவில்லை என காங்கிரசில் சிலர் கூறி வருகின்றனர். அப்படி என்றால் மைசூரு கலெக்டராக இருந்த ராஜேந்திராவை இடமாற்றம் செய்தது ஏன்?மூடாவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஆனால் பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்தது என்று கூறுகின்றனர். இது முட்டாள்தனம்.பா.ஜ., ஆட்சியில் 40 சதவீதம் கமிஷன் வாங்கப்படுகிறது என, காங்கிரஸ் தலைவர்கள் பொய்யாக குற்றஞ்சாட்டினர். அதற்கு அவர்களிடம் ஆதாரம் இல்லை. இதனால் நாங்கள் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தோம்.ஒரு பக்கம் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் ஊழல். இன்னொரு பக்கம் மூடா ஊழல். இந்த இரண்டிலும் முதல்வரின் பங்கு உள்ளது.வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழலை மூடி மறைக்க, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமைச்சராக இருந்த நாகேந்திராவை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. சித்தராமையா அரசு ஊழல் நிறைந்தது.இந்த அரசில் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை. தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் வாக்குறுதித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.லவ் ஜிகாத்தால் பாதிக்கப்படும் பெண்களைக் காப்பாற்ற, 'ஸ்ரீ ராமசேனை ஹெல்ப்லைன்' துவங்கியது. இந்த நம்பருக்கு சிலர் அழைப்பு விடுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த அரசு ஹிந்துக்களின் விரோதி.இவ்வாறு அவர் கூறினார்.
7 hour(s) ago | 2
13 hour(s) ago