உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., வெற்றி பெறாவிட்டால் சித்து முதல்வர் பதவிக்கு ஆபத்து

காங்., வெற்றி பெறாவிட்டால் சித்து முதல்வர் பதவிக்கு ஆபத்து

கோலார்: ''காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றால், முதல்வர் சித்தராமையா பதவிக்கு ஆபத்து ஏற்படும்,'' என நகர வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் எச்சரித்தார்.கோலாரில் நேற்று நடந்த குருபர் சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றால், முதல்வர் சித்தராமையாவின் பதவிக்கு அபாயம் ஏற்படும். நீங்கள் அந்த வேலையை செய்யாதீர்கள். நீங்கள் அனைவரும் சேர்ந்து, குருபர் சமுதாயத்தின் முதல்வர் சித்தாரமையா கையை பலப்படுத்த வேண்டும். காங்கிரசுக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டும். கோலார் தொகுதி வேட்பாளர் கவுதமை ஆதரிக்க வேண்டும்.ஒருவேளை இவர் தோற்றால், சித்தராமையா முதல்வர் பதவியை இழக்க நேரிட்டால், நீங்களே பொறுப்பாளி ஆவீர்கள்.இவ்வாறு அவர்பேசினார்.கூட்டம் முடிந்த பின், அமைச்சர் பைரதி சுரேஷ் அளித்த பேட்டி:கோலார் தொகுதியில், குருபர் சமுதாயம் காங்கிரசுக்கு ஆதரவளித்துள்ளது. முதல்வர் சித்தராமையாவின் கையை பலப்படுத்துவர்.காங்கிரஸ் எம்,பி., ராகுல், நேற்று முன்தினம் வாய் தவறி சிவகுமாரை முதல்வர் என, கூறிவிட்டார். பல தலைவர்கள் வாய் தவறி பேசுகின்றனர். தேவகவுடா, எடியூரப்பா பேசுவதை கேட்டால், காதை மூடிக்கொள்ள வேண்டி இருக்கும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை