உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீணா காசப்பனவருடன் சித்து நடத்திய பேச்சு தோல்வி

வீணா காசப்பனவருடன் சித்து நடத்திய பேச்சு தோல்வி

பெங்களூரு : பாகல்கோட் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள, வீணா காசப்பனவருடன், முதல்வர் சித்தராமையா நடத்திய, பேச்சு தோல்வி அடைந்து உள்ளது.பாகல்கோட் ஹுன்குந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர். கர்நாடக வீரசைவ லிங்காயத் மேம்பாட்டு ஆணைய, தலைவராக உள்ளார். இவரது மனைவி வீணா காசப்பனவர். பாகல்கோட் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவியாக இருந்தவர். கடந்த லோக்சபா தேர்தலில், பாகல்கோட் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.இந்த லோக்சபா தேர்தலில் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், அமைச்சர் சிவானந்தா பாட்டீல் மகள், சம்யுக்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் விஜயானந்த், வீணா ஆகிய இருவருமே அதிருப்தியில் உள்ளனர். ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தினர். சுயேச்சையாக போட்டியிடும்படி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை.இந்நிலையில் விஜயானந்த், வீணா, அவரது ஆதரவாளர்களுடன், முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று மாலை சமரச பேச்சு நடத்தினார். வேட்பாளர் சம்யுக்தாவுடன் ஒருங்கிணைந்து செல்லும்படியும், அவரது வெற்றிக்கு உழைக்கும்படியும் கேட்டுக் கொண்டார். “எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பதவி வழங்கப்படும்,” எனவும் முதல்வர் கூறினார். ஆனால் இதை வீணா ஏற்க மறுத்துவிட்டார். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, முகத்தை இறுக்கமாக வைத்து இருந்தார்.இதன்மூலம் வீணாவுடன், முதல்வர் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்திருப்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை