உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிரிகளை ஒடுக்க சிவகுமார் சிடி: பா.ஜ.,வின் ராஜு கவுடா புகார்

எதிரிகளை ஒடுக்க சிவகுமார் சிடி: பா.ஜ.,வின் ராஜு கவுடா புகார்

யாத்கிர் : ''கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், தன் எதிரிகளை ஒடுக்க பென் டிரைவ், 'சிடி' அஸ்திரங்களை பயன்படுத்துவார்,'' என, சுர்பூர் சட்டசபை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராஜு கவுடா குற்றம் சாட்டினார்.யாத்கிர், சுர்பூரில் நேற்று அவர் கூறிதாவது:துணை முதல்வர் சிவகுமார், பென் டிரைவ், 'சிடி' பல்கலைக்கழகம் திறந்துள்ளார். இவர் தினமும் 24 மணி நேரம் அரசியல் செய்வார். எதிராளிகளை எப்படி ஒடுக்க வேண்டும் என்பது, அவருக்கு தெரியும். சிலரை மிரட்டி பணிய வைப்பார். சிலருக்கு எதிராக 'சிடி' அஸ்திரத்தை பயன்படுத்துவார்.நேரம் வரும்போது, எதிராளிகளுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ, அதை கொடுப்பார். இப்போது ரமேஷ் ஜார்கிஹோளி, பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக, 'சிடி' அஸ்திரத்தை பிரயோகித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், இதே அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.சிவகுமாருக்கு, முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் நாற்காலி மீது கண் வைத்துள்ளார். இவர் முதல்வராக வேண்டும் என்றால், சித்தராமையா பதவியில் இருந்து கீழே இறங்க வேண்டும். எனவே என்ன வேண்டுமானாலும் செய்ய, அவர் காத்திருக்கிறார். அவசியம் ஏற்பட்டால் யதீந்திராவின் 'சிடி'யை வெளியிடுவார். இத்தகைய குணம் கொண்ட சிவகுமாருடன், முதல்வர் சித்தராமையா நடமாடக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி