மேலும் செய்திகள்
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
2 hour(s) ago | 1
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
3 hour(s) ago | 2
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
3 hour(s) ago | 46
பெங்களூரு : 'கர்நாடகாவில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களே காரணம்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., - 17, ம.ஜ.த., - 2; காங்கிரஸ் - 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில், காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் கூடுதல் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:ஓட்டுச்சீட்டு முறை தேர்தல் நடந்தபோது, மத்திய பிரதேசத்தில் மூன்றில், இரண்டு பங்கு ஓட்டுகளை காங்கிரஸ் பெற்றது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர தேர்தல் முறையில், மிகவும் குறைவான ஓட்டுகளே வந்துள்ளன. இயந்திரங்களால் தான் அந்த சூழ்நிலை மாறி உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர தேர்தல் முறை மாற வேண்டும். மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை வர வேண்டும். இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.கர்நாடகாவில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களே காரணம்.இவ்வாறு அவர்கூறினார்.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''நாடபிரபு கெம்பேகவுடாவின் 515வது ஜெயந்தியை, 27ம் தேதி, பெங்களூரு அரண்மனை மைதானம் அல்லது திறந்த வெளி மைதானத்தில் நடத்தப்படும். அன்றைய தினம் கெம்பேகவுடா கட்டிய நான்கு எல்லை கோபுரங்களில் இருந்தும், அவர் சமாதி இடத்தில் இருந்தும், ஜோதி ஊர்வலமாக கொண்டு வரப்படும். மாநில அளவிலும், பெங்., மாநகராட்சி சார்பிலும் தனித்தனியாக கெம்பேகவுடா விருது வழங்கப்படும்,'' என்றார்.
2 hour(s) ago | 1
3 hour(s) ago | 2
3 hour(s) ago | 46