பெங்களூரு: “துணை முதல்வர் சிவகுமார், 40 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.,வில் இணைவதற்கு ஒற்றைக்காலில் தயாராக உள்ளார்,” என, ராஜராஜேஸ்வரிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா கூறியுள்ளார்.ராஜராஜேஸ்வரிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:துணை முதல்வர் சிவகுமார், 40 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.,வில் இணைவதற்கு ஒற்றைக்காலில் நிற்கிறார். பா.ஜ.,வின் கதவு திறந்தால், உள்ளே புகுந்து விடுவார். ஆனால், பா.ஜ.,வினர் கதவை திறக்கவில்லை.நான்கு துணை முதல்வர்கள் வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவதால், அவர் பா.ஜ.,வில் இணைவதற்கு தயாராகி உள்ளார். காங்கிரசில் இருப்பதை விட, எங்களுடன் இருப்பது 'பெஸ்ட்' என்று முடிவு செய்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.எம்.எல்.ஏ., முனிரத்னா பேச்சு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.