மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
5 hour(s) ago | 38
பீஹார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல்
7 hour(s) ago | 6
பெங்களூரு: ''முதல்வர், துணை முதல்வர் பதவி பற்றி பேசி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பேன்,'' என, அமைச்சர்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்களான ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி இடையில், கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவுகிறது.சிவகுமாரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டுமென, ராஜண்ணா அவ்வப்போது கூறி வருகிறார். இதை வைத்து எதிர்க்கட்சிகளும் சிவகுமாரை கிண்டல் அடித்து வருகின்றன. இதனால் அவர் கடுப்பாகி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர், துணை முதல்வர் பதவிகள் குறித்து, கட்சி மேலிட அளவில் தற்போது எந்த பேச்சும் இல்லை.என் மீதுள்ள அன்பால், சிவகுமார் முதல்வராக வேண்டுமென, சந்திரசேகர சுவாமிகள் கூறினார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை கொடுக்கும்படி, யாரும் எனக்காக பரிந்துரை செய்ய வேண்டாம்.கட்சிக்காக நிறைய உழைத்துள்ளேன். கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்து உள்ளேன். மேலிடத்திற்கு அனைத்தும் தெரியும்.ஊடகங்கள் முன் முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து பேசுவதால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படுகிறது.எங்கள் கட்சிக்கு ஒழுக்கம் தான் முக்கியம். இனி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து, பொது இடத்தில் பேசக்கூடாது. அப்படி பேசினால் விளக்கம் கேட்டு, கட்சி தலைவர் என்ற முறையில் நோட்டீஸ் கொடுப்பேன். மேலிடமும் நோட்டீஸ் கொடுக்கும்.ஆட்சி சுமூகமாக நடக்க வேண்டும் என்றால், அமைச்சர்கள் தங்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுக் கொள்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 38
7 hour(s) ago | 6