உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழில் பேசி தமிழர்களை கவர்ந்த சிவராஜ்குமார்

தமிழில் பேசி தமிழர்களை கவர்ந்த சிவராஜ்குமார்

ஷிவமொகா: காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் தன் மனைவிக்காக, பிரசாரம் செய்யும் நடிகர் சிவராஜ்குமார், தமிழில் பேசி தமிழர்களை கவர்ந்தார்.லோக்சபா தேர்தலில், ஷிவமொகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கீதா சிவராஜ்குமார், போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு மே 7ல், ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. காங்கிரஸ் தலைவர்களை போன்று, நடிகர் சிவராஜ்குமாரும் மனைவிக்காக தீவிர பிரசாரம் செய்கிறார். தீர்த்தஹள்ளியில் நேற்று பிரசாரம் செய்தார். இங்கு தமிழர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், சிவராஜ்குமார் தமிழில் பேசினார்.அவர் பேசியதாவது:இங்கு தமிழர்கள் வசிக்கின்றனர். 'ஜெயிலர், கேப்டன் மில்லர்' படங்களை பார்த்தீர்களா. நன்றாக இருந்ததா. நான் பெங்களூரில் வசித்தாலும், நான் படித்தது சென்னையில் தான். நான் மட்டுமின்றி, ராகவேந்திரா, புனித், லட்சுமி, பூர்ணிமா என அனைவரும் அங்கு தான் படித்தோம்.சென்னையில் எங்களுக்கு ஒரு வீடு உள்ளது. நாங்கள் அங்கு இருந்த போது, தமிழில்தான் பேசினோம். தமிழர்கள் கர்நாடகாவுக்கு வந்தால், கன்னடம் பேசுகின்றனர். நாம் எங்கு இருக்கிறோமோ அங்குள்ள மொழியை கற்க வேண்டும். அது நாம் அந்த மொழிக்கு கொடுக்கும் மரியாதை. நாம் அண்ணன், தம்பி போன்றவர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி