உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முகத்தில் 21 முறை கத்திக்குத்து: டில்லியில் ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்

முகத்தில் 21 முறை கத்திக்குத்து: டில்லியில் ஜிம் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் 28 வயதான ஜிம் உரிமையாளர் சுமித் சவுத்ரி என்பவர் மர்மநபர்களால் 21 முறை முகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வடகிழக்கு டில்லியின் பஜன்புரா பகுதியில் சுமித் சவுத்ரி என்பவர் மர்மநபர்களால் 21 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இவர் டில்லியில் ஜிம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மனைவியும், மூன்று வயது மகனும் உள்ளனர். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ஜாய் கூறியதாவது: 'சவுத்ரி தனது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தபோது, ​​நான்கு பேருடன் சண்டையிட்டுள்ளார். அந்த நபர்கள் அவரை கத்தியால் முகத்தில் 21 முறையும் மற்ற பகுதிகளில் பலமுறையும் குத்தியுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R SRINIVASAN
ஜூலை 12, 2024 07:39

வன்முறை எல்லா மதத்திலும் இருக்கிறது. தெருவில் போவோரையும் வம்புக்கு இழுத்து சண்டை போடுவபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காரணம் காமராஜரைப்போல் ராஜாஜியைப்போல் அமைதியான தலைவர்கள் இன்று இல்லை .அம்மாதிரி தலைவர்கள் இன்று உருவாக வேண்டுமானால் மக்கள் விழிப்புடன் இருந்து ஓட்டுப்போடவேண்டும் .போலீஸ் துறையில் F.V. அருள் என்ற போலீஸ் COMMISSIONARAI போலீஸ் டிபார்ட்மெண்டில் இன்றும் நினைவில் வைத்துக்கொண்டிருப்பார்கள் .காரணம் குத்ரவாளிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாய் இருந்தார்.


Rajalakshmi
ஜூலை 11, 2024 15:28

எந்த மதத்தை சேர்ந்தவர்கள் குத்திக்கொன்றனர் என்பதையும் வெளியிடவும் .


வாய்மையே வெல்லும்
ஜூலை 11, 2024 12:15

வாயும் கையும் சும்மா இருந்தா உசுரு தப்பிக்கும்... ஜிம் பாடி பில்டர் என்றால் சக்திமான் ரேஞ்சுக்கு சக்தி உண்டு என்பதல்ல. நடக்குற எல்லா விஷயங்களிலும் தங்களின் நடவடிக்கைகளை அளவோடு பிரயோக படுத்தினால் உடம்பும் உசுரும் தப்பும். நேரெதிராக உங்களையும் மீறி கோபதாபத்தில் ஆக்ரோஷத்தில் சண்டையிட்டு மடிந்து விட்டர்கள். யார் ஜெயித்தார்கள் என்பதல்ல கேள்வி பிரச்னையையை எம்புட்டு கொண்டு விட்டேர்கள் உங்களை நம்பி வந்த குடும்பத்தாருக்கு என்பது தான் மிகப்பெரிய வினா


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 11, 2024 12:14

மர்மநபர்களால் 21 முறை கத்தியால் குத்தி ???? ஓ, புரியுது ......


rajkumar
ஜூலை 11, 2024 11:32

அய்யோ பாவம்...


மேலும் செய்திகள்