உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிறந்தநாள், பண்டிகைகளில் பள்ளிகளில் சிறப்பு உணவு

பிறந்தநாள், பண்டிகைகளில் பள்ளிகளில் சிறப்பு உணவு

பெங்களூரு: 'அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பண்டிகை நாட்கள், சமுதாய உறுப்பினர்களின் பிறந்த நாட்களில், சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:மாணவர்களின் வசதிக்காக, மத்திய அரசு 'பி.எம்., பூஷண்' மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியது. அரசு சாரா தொண்டு அமைப்புகள், வர்த்தகர்கள், தனி நபர்கள் தங்களுக்கு விருப்பமான பிறந்த நாள், திருமணம், திருமண ஆண்டு விழா, பண்டிகை நாட்களில், மாணவர்களுக்கு சிறப்பு உணவு வினியோகிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்காக கல்வித்துறை, சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும், தரமான உணவு வழங்க வேண்டும். காய்கறிகள், சிறு தானியங்கள் கலந்த 'மெனு' இருக்க வேண்டும். உணவு தானியங்கள் சேகரித்து வைக்கும்போதும், சமையல் செய்யும்போதும் துாய்மை, சுகாதாரத்தை பின்பற்றுவது கட்டாயம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ