உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலங்கை தேர்தல்: தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் அறிவிப்பு

இலங்கை தேர்தல்: தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் அறிவிப்பு

கொழும்பு, : இலங்கை அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி., பாக்கியசெல்வம் அரியநேத்திரன், 69, அறிவிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல், செப்., 21ல் நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.இந்நிலையில், இலங்கையில் உள்ள பல்வேறு தமிழர் கட்சிகளும் ஒன்றிணைந்து அதிபர் தேர்தலை சந்திக்க கடந்த மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, தமிழ்க்கட்சி களின் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி., பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இலங்கையின் பல்வேறு தமிழ்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைமை வகித்து வரும் பிரதான கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு தரவில்லை. அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 15ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ