உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் வீட்டு வாடகை உரிமையாளர்கள் திடீர் குறைப்பு

பெங்களூரில் வீட்டு வாடகை உரிமையாளர்கள் திடீர் குறைப்பு

பெங்களூரு : பெங்களூரில் வீட்டு வாடகையை, வீடுகளின் உரிமையாளர்கள் குறைத்து வருகின்றனர்.பெங்களூரு நகரை ஐ.டி., பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர்.நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், அலுவலகம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்கின்றனர். அதிக வாடகை கேட்டாலும், தயங்காமல் தந்து விடுகின்றனர்.கடந்த 2020ல் கொரோனோ பாதிப்பு அதிகமானதும், தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய நிறுவனங்கள் அனுமதித்தன. இதனால் பெரும்பாலானோர் பெங்களூரை காலி செய்துவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.இதனால் நகரின் பல இடங்களில் வீடுகளில் முன்பு, 'டூலெட்' பலகை தொங்கியது. வீட்டு வாடகையையும் உரிமையாளர்கள் கணிசமாக குறைத்தனர். கொரோனா பரவல் குறைந்ததும், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் பெங்களூருக்கு வந்தனர். பெங்களூரில் மெல்ல மெல்ல வீடுகளின் வாடகையும் அதிகரித்தது.ஆனால், பெங்களூரு ரூரல் பகுதிகளில் வீடுகளின் வாடகை குறைவாக இருப்பதால், நகரில் வசிப்பவர்கள் ரூரல் பகுதிகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால், பெங்களூரு நகரில் உரிமையாளர்கள் வீட்டு வாடகையை குறைக்க ஆரம்பித்துள்ளனர்.கோரமங்களாவின் முக்கிய இடங்களில் மூன்று பெட்ரூம் கொண்ட வீடுகளுக்கு வாடகை 75,000 ரூபாயாக இருந்தது. தற்போது 65,000 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஒயிட்பீல்டில் மூன்று பெட்ரூம் கொண்ட வீடுகள் 45,000 ரூபாய் வாடகையாக இருந்தது. தற்போது 35,000 ரூபாயாக உள்ளது.பெங்களூரில் புறநகர் ரயில் சேவை துவங்கப்பட்டால், நகருக்குள் இருப்பவர்கள் இன்னும் ரூரல் பகுதிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் எதிர்காலத்தில் மேலும் வீடுகளின் வாடகை கட்டணம் குறையலாம் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ