உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி மீது வழக்கு தொடர்வதா? கேரள அரசுக்கு பா.ஜ., கண்டனம்!

ஜனாதிபதி மீது வழக்கு தொடர்வதா? கேரள அரசுக்கு பா.ஜ., கண்டனம்!

திருவனந்தபுரம் : ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்திருப்பது, பெண்கள் மற்றும் பழங்குடியினரை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பாகுபாட்டுடன் நடத்துவதையே பிரதிபலிக்கிறது' என, பா.ஜ., விமர்சித்துஉள்ளது.

தாமதம்

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில், பல்கலை சட்ட திருத்த மசோதா, கேரள கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களில், ஏழு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் தாமதம் செய்தார். அவற்றை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி திரவுபதி முர்மு காலம் தாழ்த்தி வருவதால், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.சட்டசபையில் நிறைவேறிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆரிப் முகமது கானின் செயலை சட்டவிரோதமாக அறிவிக்கும்படியும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளீதரன் நேற்று கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூ., எப்போதுமே பெண்களுக்கு எதிரான கட்சியாகவே இருந்து வந்துள்ளது. கடந்த 2022 வரையில், அக்கட்சியின் செயற்குழுவில் பெண்கள் இடம் பெற்றதில்லை. அவர்கள் பெண்களுக்கு மட்டுமின்றி பழங்குடியினருக்கும் எதிரான நிலைபாடு கொண்டவர்கள். திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டதை அவர்கள் எதிர்த்தனர்.

தெளிவாக புரியும்

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, அவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஏன் வழக்கு தொடுக்கின்றனர் என்பது தெளிவாக புரியும்.மசோதாக்கள் கிடப்பில் போடப்படுவது முதல்முறை அல்ல. ஆனால், ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது இதுவே முதன்முறை. சமூகநீதி மற்றும் சமத்துவத்தை காக்க நினைக்கும் மக்கள், ஜனாதிபதி முர்முவை அவமானப்படுத்தும் நடவடிக்கையை ஏற்க மாட்டர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balasubramanian
மார் 25, 2024 13:30

எதிர் கட்சிகள் நாங்கள் நினைத்தால் டிரம்ப் பைடன் மீது கூட வழக்கு தொடருவோம்! ஹையோ ஹையோ! ?


V. Kanagaraj
மார் 25, 2024 10:27

If the filing of petition in Honble Supreme Court is legally correct, the e, creed and gender are immaterial


அப்புகுட்டன் நாயர்
மார் 25, 2024 08:52

ஜனாதிபதி ஒண்ணும் கேள்விக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஏன் முடிவே எடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்றால் பதில் சொல்ல முடியாதா?


venugopal s
மார் 25, 2024 07:10

ஜனாதிபதி ஆளுநர் போன்ற பதவிகள் வகிப்பவர்கள் அரசியல் செய்யாமல் இருந்த வரை இந்த நிலை இல்லையே!


Kasimani Baskaran
மார் 25, 2024 05:22

கம்முநிசக்கோட்பாடுகள் என்றுமே ஜனநாயகத்துக்கு விரோதமானது ஆகவே கம்முநிசத்தை உடனே தடை செய்து இதுகளை நொங்கெடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்