உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டம் போதும்; வேலைக்கு வாங்க: டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

போராட்டம் போதும்; வேலைக்கு வாங்க: டாக்டர்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கோல்கட்டா டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்பான உத்தரவிட்டது.

மர்ம நபர்கள்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், கடந்த, 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wrauf53z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த மருத்துவமனையை சூறையாடினர். சம்பவத்தை கண்டித்தும், உரிய பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவு படி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.

விசாரணை

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ' கோல்கட்டா மருத்துவக் கல்லுாரி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேற்கு வங்க அரசின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. வழக்கு விசாரணை அறிக்கையை சி.பி.ஐ., சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: * கோல்கட்டா டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். * போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. டாக்டர்கள் பணிக்கு மீண்டும் செல்வதை உறுதி செய்ய வேண்டும். * டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு ஒன்று அமைக்க வேண்டும். டாக்டர்கள் பணிக்குத் திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவர். * டாக்டர்கள் வருகைப்பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் கூற முடியாது. மனிதாபிமானமற்ற முறையில் டாக்டர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுகின்றனர்.* டாக்டர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அறிக்கை தாக்கல்

இதற்கிடையே, கோல்கட்டா ஐகோர்ட் உத்தரவு படி, வழக்கை விசாரணை நடத்தி சி.பி.ஐ., இன்று அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஆக 22, 2024 22:13

இறந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தவேண்டும். அது சரிதான். ஆனால் அதற்காக மற்ற மருத்துவர்கள் தொடர்ந்து தங்கள் மருத்துவப்பணியை விட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் மருத்துவமனையில் உள்ள மற்ற பிணியாளர்களுக்கு மிக மிக சங்கடம். அவர்கள் மருத்துவம் இல்லாததால் உயிரிழக்க வாய்ப்பும் உண்டு. அப்படி எதுவும் நடக்காமல் இருக்க கண்டனத்தை தெரிவித்துவிட்டு மருத்துவர்கள் மீண்டும் தங்கள் பணியை துவங்கவேண்டும். நீதிமன்றமும் காலம் தாழ்த்தாமல் இந்த வழக்கில் உடனே குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.


அப்பாவி
ஆக 22, 2024 22:01

சுப்ரீம் கோர்ட் 40 நாள் கோடை விடுமுறை எடுத்துக்கும். யாருக்கும் பாதிப்பே இருக்காது கோவாலு.


அன்புராஜ்
ஆக 22, 2024 16:51

ஏன்? குற்றவாளிகளை உடிச்சு விசாரிச்சு தூக்குல போட்டுட்டீங்களாக்கும்? மூவாயிரம் பக்கம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவே மூணுவருசமாகுமே? அப்பறம்தானே அடியப்புடிடா பாரத பட்டான்னு என்ப ஆச்சுன்னு வுசாரிப்பீங்க?


Rengaraj
ஆக 22, 2024 15:06

நாடெங்கும் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இதே போன்று கண்டிப்பை உச்சநீதிமன்றம் மாநில அரசாங்கங்களிடம் காட்டுமா என்பது சாமானியனின் சந்தேகம். கொலை நடந்தால் அதற்கு சாட்சிகள், விசாரணை என்று காலம்கடந்து நீதி விசாரணை தொடர்கிறது. நீதியோ சிலசமயம் கிடைக்கிறது. பலருக்கு கிடைக்காமல் போகிறது. பாலியல் கொடுமையை விசாரித்து தீர்ப்பு சொல்ல இத்தனை அவகாசமா ? விரைவு நீதிமன்றங்கள் அமைத்து என்ன பலன் ?


R.RAMACHANDRAN
ஆக 22, 2024 14:01

இந்த நாட்டில் அரசு ஊழியர்களை விட்டால் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பர். இந்த நாட்டில் மருத்துவர்களுக்கு மட்டுமா பாதுகாப்பு இல்லை.குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதுதான் உண்மை நிலை.தெய்வம் தான் நேர்மையானவர்களுக்கு காவல் புரிகிறது.


Barakat Ali
ஆக 22, 2024 13:46

உங்களை நம்பி அவர்கள் பணிக்குத் திரும்பினால் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்குமா ???? அவர்களது பாதுகாப்புக்கு உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா ???? மத்திய மாநில அரசுகளுக்கு இரண்டே நாட்களில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கும் பொறுப்பை அளியுங்கள் ... அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழுவை உடனடியாக அமைக்க ஏற்பாடு செய்யுங்கள் ...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை