உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., ரங்கநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

காங்., ரங்கநாத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துமகூரு குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முறைகேடு செய்து, வெற்றி பெற்றார் என்றும் அவரது வெற்றி செல்லாது என்றும் அறிவிக்கக் கோரி, பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ணகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்தது. மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள் யூகம் மற்றும் கற்பனை அடிப்படையில் இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.உயர் நீதிமன்ற முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணகுமார் மேல்முறையீடு செய்தார். நேற்று முன்தினம் மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க ரங்கநாத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !