உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்ற கணவர் 

நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்ற கணவர் 

தார்வாட்: நடத்தை சந்தேகத்தில் கோடாரியால் வெட்டி, மனைவியை கொன்ற கணவர், போலீசில் சரண் அடைந்தார்.தார்வாட் நவலகுந்த் அயட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா, 48. இவரது மனைவி மல்லவ்வா, 45. இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பா தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. மல்லவ்வாவை, சிவப்பா சரமாரியாக தாக்கினர். அக்கம்பக்கத்தினர் அவரை சமாதானப்படுத்தினர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மல்லவ்வாவை கோடாரியால் சிவப்பா வெட்டினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் நவலகுந்த் போலீஸ் நிலையம் சென்று, சிவப்பா சரண் அடைந்தார். அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்