உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற கணவர்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற கணவர்

உடுப்பி: நடத்தை சந்தேகத்தால் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உடுப்பி பிரம்மவர் சாலிகிராமத்தில் வசிப்பவர் கிரண் உபாத்யா, 30. இவரது மனைவி ஜெயஸ்ரீ, 28. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.சில தினங்களாக ஜெயஸ்ரீ மொபைல் போனில் யாரிடமோ அடிக்கடி பேசி வந்துள்ளார். இது பற்றி கிரண் கேட்டபோது சரியாக பதில் சொல்லவில்லை.மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையில் சண்டை ஏற்பட்டது. பின், இருவரும் துாங்க சென்றனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தம்பதி இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கிரண், அரிவாளால் ஜெயஸ்ரீயை வெட்டினார். அவர், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் சென்று மனைவியை கொன்று விட்டதாக கிரண் கூறினார். தகவல் அறிந்து அங்கு வந்த கோட்டா போலீசார், கிரணை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை