ஆன்மிகம் சித்திரை திருவாதிரை
l சித்திரை மாத திருவாதிரையை ஒட்டி, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கிறது. நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை: அபிஷேகம், திவ்ய பிரபந்தம், சேவா காலம், சாத்துமுரை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல், அன்னதானம்; மாலை 6:00 மணி: ராமானுஜர் ரத உற்சவம். இடம்: பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திர், ஹலசூரு பஜார் தெரு, பெங்களூரு. ஆதி சங்கராச்சார்யா ஜெயந்தி
l ஆதி சங்கராச்சார்யா ஜெயந்தி மஹோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேரம்: காலை 8:30 மணி: கணபதி பூஜை; 9:30 மணி: பஞ்சாமிர்த அபிஷேகம், ருத்ர ஹோமம், சுவாமி வீதி உலா; பகல் 12:00 மணி: தீபாராதனை. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். ராகு கால பூஜை
l ராகு கால பூஜையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலச பூஜை. நேரம்: மாலை 4:00 முதல் 6:00 மணி வரை இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் தெரு, ஹலசூரு. ராமானுஜர் ஜெயந்தி
l ராமானுஜர் ஜெயந்தி மஹோற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேகம். நேரம்: காலை 9:00 மணி: அபிேஷகம்; இரவு 7:00 மணி: ஊஞ்சல் சேவை. இடம்: திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு, பெங்களூரு. ராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவம்
l ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர மஹோற்சவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 9:00 மணி: அலங்காரம், திருமஞ்சனம், சேஷவாகன உற்சவம். இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, பெங்களூரு. பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.பொது ஆலோசனை கூட்டம்
l சிங்கப்பூர், மலேசிய தமிழர்கள் ஒற்றுமை போன்று, கர்நாடகா மாநில தமிழர்கள் ஒற்றுமை காண, தமிழ் ஆரவலர் எஸ்.டி.குமார் ஆலோசனை கூட்டம். நேரம்: காலை 10:00 மணி. இடம்: யாதவா சங்கம், ஹலசூரு ஏரி அருகில், பெங்களூரு. கதை சொல்லுதல் மற்றும் புத்தக கண்காட்சி
l நம்ம ஆஸ்ரமம் வழங்கும் நான்கு முதல் ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கதைகள் ஜானகி சபேஷ் கூறுகிறார். நேரம்: காலை 10:30 மணி: கதை சொல்லுதல்; 11:30 மணி: கவுசிக்கின் மேஜிக் ஷோ; மதியம் 12:15 மணி: ஓவியம், பெயின்டிங் பயிற்சி. காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை; குழந்தைகள் புத்தக கண்காட்சி. இடம்: நம்ம ஆஸ்ரமம், 126/5/4, நல்லுாரஹள்ளி பிரதான சாலை, சித்தாபுரா, ஒயிட்பீல்டு, பெங்களூரு. களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு. யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. கோடை பயிற்சி
l பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்கைளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே -அவுட், பெங்களூரு.