உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாகூர் தன் கையால் எழுதிய ஜன..கன...மன...கடிதம்: இணையத்தில் வைரல்

தாகூர் தன் கையால் எழுதிய ஜன..கன...மன...கடிதம்: இணையத்தில் வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் தேசிய கீதமான ஜன...கன..மன.. பாடலை எழுதிய வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன.கன.மன.. பாடல் இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. இதனை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் விழாக்களில் இந்திய தேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் எழுதிய ஜன.கன.மன... ஆங்கில கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.வங்க மொழியில் இருந்து ‛தி மார்னிங் சாங் ஆப் இந்தியா ' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இப்பாடலை ரவீந்திரநாத் தாகூர் தன் கையால் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதம் நோபல் பரிசு அமைப்பின் ‛எக்ஸ்' தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அனந்த ராமன்
ஆக 16, 2024 08:00

தாகூரின் ஜனதா 5ம் ஜார்ஜ் மன்னன் இந்தியா வரவேற்பு பாடல். நாட்டின் அடிமைச் சின்னம் தேசிய கீதம் நம் சுதந்திர,உணர்வின் அவமானம். வந்தே மாதரம் தான் தேசிய கீதம். இந்த அரசு இதை மாற்றி நம் நாட்டின் மானம் கலக்கமா?


Mohanakrishnan
ஆக 15, 2024 23:02

ஜன கன மன மட்டும் தெரிந்தால் போதும் என்று திருட்டு மாடல் சட்டம் இயற்றி உள்ளது தெரியாதா


ஆரூர் ரங்
ஆக 15, 2024 22:00

தமிழக அமைச்சர்கள் எத்தனை பேருக்கு மனப்பாடமாக பாடத் தெரியும்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை