உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தர கன்னடா கலெக்டராக  தமிழ் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா

உத்தர கன்னடா கலெக்டராக  தமிழ் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா

பெங்களூரு: உத்தர கன்னடா மாவட்ட கலெக்டராக, தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் நேற்று முன்தினம் 23 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அரசு பணியிட மாற்றம் செய்து, புதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன.நேற்று மேலும் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.உத்தர கன்னடா மாவட்ட கலெக்டராக இருந்த கங்குபாய் ரமேஷ் மனகர், கர்நாடக அரசிதழ் துறையின் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.மைசூரில் அப்துல் நசீர் சாப் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த லட்சுமி பிரியா, உத்தர கன்னடா மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், 2015ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., குழுவை சேர்ந்த தமிழ் அதிகாரி ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்