உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி: கண்ணீர் புகை குண்டு வீச்சு

மே.வங்கத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி: கண்ணீர் புகை குண்டு வீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போராடும் மாணவர்களை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர்; தண்ணீர் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=15stc54h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம்

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) கோல்கட்டா, ஹவுராவில் தலைமை செயலகத்தை, ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட முயன்றனர். 'பெண் டாக்டர்கள் கொலைக்கு நீதி வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு

போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டினர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, மேற்குவங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian
ஆக 27, 2024 18:22

இந்த நீதி கேட்டல் தடி அடியும் , கண்ணீர் புகையும் தான் கிடைக்கும் , போங்க போய் ஆகவேண்டியதா பாருங்க .


sankar
ஆக 27, 2024 16:49

அங்கே அனுப்புங்கள்


P. VENKATESH RAJA
ஆக 27, 2024 15:12

தவறு செஞ்சது மாநில அரசு பெண் டாக்டர் கொலை செஞ்சதுக்கு எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. போராட்டம் செய்தவர்கள் மீது தடியடி நடப்பது ? அநீதி


Loganathan Kuttuva
ஆக 27, 2024 15:12

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுகிறார்கள் .அங்கு பெங்காலி மொழி பேசுபவர்களும் ,தேவையான பெங்காலி பத்திரிகைகளும் கிடைக்கிறது .


Nandakumar Naidu.
ஆக 27, 2024 15:04

மாதாவின் மமதையை மற்றும் அகங்காரத்தையும் மக்கள் மண்ணோடு மண்ணாக அழிக்க வேண்டும். மேற்கு வங்கத்திர்க்கும் நல்லது.


gmm
ஆக 27, 2024 14:18

பெண் டாக்டர் கொலையில் நீதி தாமத படுத்தப்பட்டு விட்டது. தவறான கோணத்தில் விசாரணை. டீன் ஊழல் தனி. கொலை தனி. கொலையாளி யார்? டாக்டர் உடல் எரிக்கப்பட்ட பின்பும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்த மாநில நிர்வாகத்தை முடக்க நீதிமன்றத்திற்கு என்ன தயக்கம்? புதிய மணிப்பூர் நீதிமன்ற தவறான விவாதத்தில் உருவாகி விடும். சில நீதிபதிகள் சட்டத்திற்கு வெளியே செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். மத்திய அரசு ஏன் முறைப்படுத்த முடியவில்லை?


சமீபத்திய செய்தி