மேலும் செய்திகள்
தலைமை நீதிபதி மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின், சோனியா கண்டனம்
2 hour(s) ago | 23
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
6 hour(s) ago | 44
பெங்களூரு: பெங்களூரில் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை கொன்ற வாலிபர், மத்திய பிரதேசத்தின் போபாலில் கைது செய்யப்பட்டார்.பீஹாரைச் சேர்ந்தவர் கிருத்தி குமாரி, 22. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். பெங்களூரில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 23ம் தேதி இரவு விடுதிக்குள் புகுந்த வாலிபர், கிருத்தி குமாரியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். கொலை காட்சிகள் தொடர்பான, வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.போலீசார் நடத்திய விசாரணையில், கிருத்தி குமாரியை கொலை செய்தது, மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அபிஷேக், 24 என்பது தெரிந்தது. அவரை கைது செய்ய, கோரமங்களா போலீசார், போபால் சென்றனர். போபாலில் பழைய வீட்டில் பதுங்கி இருந்த அபிஷேக், நேற்று காலை கைது செய்யப்பட்டார். விமானத்தில் அவர், பெங்களூரு அழைத்து வரப்பட்டார்.எம்.பி.ஏ., பட்டதாரியான அபிஷேக், பெங்களூரில் உள்ள சகோதரர் வீட்டில் வசித்தார். வேலைக்கு எதுவும் செல்லவில்லை. அபிஷேக்கும், கிருத்தி குமாரியின் தோழியும் காதலித்தனர். அபிஷேக்கை வேலைக்கு செல்லும்படி காதலி கூறினார். ஆனால் அவர் செல்லவில்லை. ஆனால் வேலைக்கு செல்வதாக, காதலியிடம் பொய் கூறி உள்ளார்.அபிஷேக் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, கிருத்தி குமாரிக்கு தெரிய வந்தது. தனது தோழியிடம் கூறினார். தன்னை ஏமாற்றியதால் அபிஷேக்கை காதலி பிரிந்தார். காதலி பிரிந்து செல்வதற்கு, கிருத்தி குமாரி தான் காரணம் என்று கருதி, அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அபிஷேக்கிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
2 hour(s) ago | 23
6 hour(s) ago | 44