உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காது கூசும் கருத்தையும் கவனிச்சு கேக்கணும்: கட்கரி அறிவுரை யாருக்குன்னு பாருங்க!

காது கூசும் கருத்தையும் கவனிச்சு கேக்கணும்: கட்கரி அறிவுரை யாருக்குன்னு பாருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: 'ஆட்சியாளர் தனக்கு எதிரான மிக மோசமான கருத்துக்களை கூட சகித்துக்கொள்வதும், அதன் அடிப்படையில் சுய பரிசோதனை செய்வதும் தான் ஜனநாயகம்' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.புனே எம்.ஐ.டி., பல்கலையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், நிதின் கட்கரி பேசியதாவது: தீண்டாமை, சமூக தாழ்வு மற்றும் மேன்மை பற்றிய கருத்துகள் நீடிக்கும் வரை தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி முழுமையடைந்ததாக கூற முடியாது. ஆட்சியாளர்கள், தங்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் மிக மோசமான கருத்துக்களை சகித்துக் கொள்வதும், அதன் அடிப்படையில் சுய பரிசோதனை செய்து கொள்வதும் தான் முக்கியம். அதுதான் ஜனநாயகம். இந்தியாவில் கருத்து வேறுபாடுகளால் பிரச்னை இல்லை. கருத்துக்களே இல்லை என்பதுதான் பிரச்னையாக உள்ளது. நாங்கள் வலதுசாரிகளும் இல்லை, இடதுசாரிகளும் இல்லை, சந்தர்ப்பவாதிகள். எழுத்தாளர்கள் எந்த அச்சமும் இல்லாமல் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார். சமீபத்தில், 'அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது.ஆவணங்கள் வேகமாக நகர்கின்றன. என்னை ஒரு அரசியல் தலைவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்பினார். அந்த வாய்ப்பை ஏற்க நான் மறுத்துவிட்டேன்' என நிதின் கட்கரி கூறியது அரசியல் களத்தில் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vbs manian
செப் 21, 2024 15:56

அடிக்கடி கொளுத்தி போடுகிறார். புரியாத புதிர்.


Kanns
செப் 21, 2024 10:30

Advice to Modi


Barakat Ali
செப் 21, 2024 09:02

தமிழ்நாட்டு அரசுக்கு சொன்னதுபோல தோணுது ........


அரசு
செப் 21, 2024 08:37

ஒரு சிறந்த அரசியல்வாதி. நமது நாட்டின் பிரதமர் ஆவதற்கு இவருக்கு முழு தகுதி உள்ளது.


Barakat Ali
செப் 21, 2024 09:15

உங்களைப் போல பலர் சொல்லணும் .... அதுதான் அவரது ஆசை .......


VENKATASUBRAMANIAN
செப் 21, 2024 08:15

நேர்மையான மனிதர் .. இதுதான் பாஜக


RAMAKRISHNAN NATESAN
செப் 21, 2024 09:41

பூனையை கையில வெச்சுக்கிட்டே சகுனம் பார்க்குற கட்சி பாஜக ன்னு சொல்ல வர்ரீங்களோ ????


Devanand Louis
செப் 21, 2024 08:06

காது கூசும் கருத்தையும் கவனிச்சு கேக்கணும்: சென்னை RTO CENTRAL அலுவலகங்களில் நடக்கும் நிவாகசீர்கேடுகள் - லஞ்சம் வாங்குவதிலும் , parivaahan ன் வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் பல தில்லுமுல்லுவேலைகளை செய்தும் வாகன ஓட்டுபவர்கள் ன் உரிமங்கள் வழங்குவதில் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி பெரும் லஞ்சம் வாங்குகிறார்கள் - மக்களின் வேண்டுகோள் லஞ்சஒழிப்புத்துறையினர் அங்கு சென்று காலதாமதம் செய்யும் அலுவலர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் .


SUBBU,MADURAI
செப் 21, 2024 08:05

இந்த கட்கரி கூறும் அரசியல் தலைவர் வேறு யாருமல்ல குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் சரத்பவார்தான் அந்த குடும்ப கலக்கி ஒருத்தர் சொன்னவுடன் இவரை பிரதமராக ஆக்கிவிடுவார்களா? பிரதமர் மோடி அவருடைய இந்த 3.0 ஆட்சியில் இந்த கட்கரிக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்க வேண்டியது இல்லை. அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் இந்த கட்காரியை கழற்றி விட வேண்டும் அப்போதுதான் இவர் இந்த மாதிரி தன் சொந்தக் கட்சியினரை தாக்காமல் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பார்.


சிவா அருவங்காடு
செப் 21, 2024 07:54

பதவி ஆசை படுத்தும் பாடு... இவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது என்ற உண்மையை உணர மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


Duruvesan
செப் 21, 2024 09:27

நாலாவது முறையும் வருவாங்க, நீங்க வீடியலுக்கு மட்டுமே ஒட்டு போடுங்க


சமீபத்திய செய்தி