மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
25 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
36 minutes ago
தாவணகெரே : ''மாநில தலைவர் விஜயேந்திராவின் தவறால், தாவணகெரே லோக்சபா தொகுதி காங்கிரசுக்கு சென்றது,'' என, ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் குற்றஞ்சாட்டினார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் மனைவி காயத்ரி சித்தேஸ்வரும், காங்கிரசின் பிரபா மல்லிகார்ஜுனும் போட்டியிட்டனர். இதில், பிரபா மல்லிகார்ஜுன், 26,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்நிலையில், தாவணகெரேயில், நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலில் தாவணகெரே வேட்பாளர் தேர்வில், மாநில தலைவர் நினைத்திருந்தால், காங்கிரசுக்கு பதிலாக, பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்திருக்கும். மாநில தலைவர் விஜயேந்திராவின் தவறால், தாவணகெரே லோக்சபா தொகுதி காங்கிரசுக்கு சென்றது.தாவணகெரேயில் எதிர்கோஷ்டியை உருவாக்கியதே மாநில தலைவர் தான். காயத்ரி சித்தேஸ்வருக்கு சீட் கொடுத்தபோது, எதிர்ப்பு கிளம்பியது. நான்கு சுவற்றுக்குள் பேச வேண்டியதை, பொது வெளியில் பேசக்கூடாது என்று மாநில தலைவர் கூறினார்.எனக்கு யாரும் போன் செய்யவில்லை. என்னை தொடர்பு கொண்டிருந்தால், பதிலளித்திருப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
25 minutes ago
36 minutes ago