வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பார் க்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு
இந்தியக் குடி-மகன்கள் எவ்ளோ கேவலமாக ஆயிட்டாங்க...
கதக்: 'உணவு சரியில்லை' என கீழே கொட்டிய போதை வாடிக்கையாளருக்கு, அதே உணவை ஊழியர்கள் எடுத்து, வாயில் வலுக்கட்டாயமாக ஊட்டிய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.கர்நாடக மாநிலம், கதக் நகரில் தனியார் பார் அண்டு ரெஸ்டாரென்ட் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர் ஒருவர், இங்கு வந்து மது அருந்தினார். பின், உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டார்.திடீரென, 'உணவு சரியில்லை; உணவின் விலையையும் அதிகரித்து உள்ளீர்கள்' என ஊழியரை திட்ட ஆரம்பித்தார்.ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.ஆனால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த வாடிக்கையாளர், உணவை கீழே கொட்டினார்.இதனால் கோபமடைந்த ஊழியர்கள், 'நீங்கள் சாப்பிடும் உணவை விளைவிக்க, விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா' என கூறி, கீழே கொட்டப்பட்ட உணவை எடுத்து, வாடிக்கையாளரின் வாயில் வலுக்கட்டாயமாக ஊட்டினர்.மேலும், 'உங்களுக்கு உணவு பிடிக்கவில்லை என்றால், திருப்பி கொடுத்திருக்க வேண்டும். உணவின் விலை அதிகமாக இருந்தால், வேறு ஹோட்டலுக்கு செல்லலாம்.'அதைவிடுத்து, உணவை ஏன் கீழே கொட்டினீர்கள். இந்த உணவு கூட கிடைக்காமல், எத்தனை பேர் அவதிப்படுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா' எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.இந்த சம்பவத்தை, அங்கிருந்தோர் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
பார் க்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு
இந்தியக் குடி-மகன்கள் எவ்ளோ கேவலமாக ஆயிட்டாங்க...