மேலும் செய்திகள்
மேகதாது திட்டத்தில் கர்நாடகா அரசு மும்முரம்; 30 பேர் கொண்ட குழு அமைப்பு
53 minutes ago | 2
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
4 hour(s) ago | 3
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
8 hour(s) ago
புதுடில்லி:தலைநகர் டில்லி மற்றும் புறநகரில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.டில்லியில் சில நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்தே கனமழை கொட்டித் தீர்த்தது. ரிட்ஜில் 7.24 செ.மீ., மழை பொழிந்துள்ளது. சப்தர்ஜங் - 2.87, லோதி சாலை 2.56 மழை பதிவாகி இருந்தது. தென்மேற்குக் காற்று அரபிக்கடலில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து டில்லி வழியாகக் கடக்கும் கனமழை கொட்டுகிறது. டில்லிக்கு அதிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த மூன்று நாட்களுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் சிரமங்கள் ஏற்படும் என கூறியுள்ளது. நேற்று மாலை 5:30 மணிக்கும் காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாகவே இருந்தது. இந்த மாதத்தில் இதுவரை இயல்பை விட 70 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. போக்குவரத்து
மிண்டோ சுரங்கப் பாதை, பெரோஸ் ஷா சாலை, படேல் சவுக் மெட்ரோ ஸ்டேஷன் பகுதி மற்றும் மஹராஜ் ரஞ்சீத் சிங் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. டில்லி மாநகர் முழுதும் அனைத்து பாதாளச் சாக்கடைகளிலும் மழை நீர் நிரம்பியது. சத்தா ரயில் நிலையத்தில் இருந்து பிலிகோத்தி நோக்கி செல்லும் வழியில் பழைய டில்லி ரயில் நிலையம் அருகே சாலை முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது. மக்கள் முழங்கால் அளவு நீரில் நடந்து சென்றனர்.அதேபோல, பெரா என்கிளேவ் ரவுண்டானாவில் இருந்து பீராகர்ஹி செல்லும் சாலையிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அவுட்டர் ரிங் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.புதிய ரோஹ்தக் சாலை, ஆனந்த் பர்பத், ரோஹ்தக் சாலையில் நங்லோயில் இருந்து திக்ரி எல்லை நோக்கிச் செல்லும் சாலையில் வெள்ளம் தேங்கியது. அந்தப் பகுதியில் பல இடங்களில் பள்ளங்கள் இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.வாகன ஓட்டிகள் முண்ட்கா செல்வதை தவிர்த்து மாற்று சாலையை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் அறிவுத்தினர்.வடக்கு டில்லி சாஸ்திரி நகர், பழைய போலீஸ் தலைமையக வெளியேறும் வழியில் இருந்து இந்திர பிரஸ்தா மேம்பாலம் வரையிலான இந்திர பிரஸ்தா சாலையில் வெள்ளம் தேங்கி இருந்ததால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.ஐ.டி.ஓ., யமுனா பாலத்தில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் கடும்வ் அவதிப்பட்டனர். பீராகர்ஹி, மங்கோல்புரி மேம்பாலம், மதுபன் சவுக் மற்றும் காஷ்மீரி கேட் ஆகிஅ இடங்களிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. ஏராளமானோர் காஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, மெட்ரோ ரயிலில் சென்றனர்.சத்தா ரயில் சவுக், நிகாம் போத் காட், பதே சிங் மார்க், ஆசாத் மார்க்கெட் ஆகிய பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தன. குழந்தைகள் மீட்பு
வடமேற்கு டில்லி மின்டோ சுரங்கப் பாதையில் சிக்கிய பள்ளிப் பேருந்தில் இருந்து மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டனர். மேலும் அங்கு ஒரு ஆட்டோவும் மூழ்கியது. அதை ஏராளமானோர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.மழை காரணமாக ஆட்டோவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதை சீரமைப்பதற்குள் வெள்ளம் சூழ்ந்து மூழ்கியதால் அதன் டிரைவர் மட்டும் தப்பி விட்டதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.மிண்டோ பாலம் சுரங்கப்பாதையில் வெள்ளம் அதிகரித்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.கன்னாட் பிளேஸ் அவுட்டர் சர்க்கிள் மற்றும் மின்டோ சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஜவஹர்லால் நேரு சாலை, பாரகம்பா சாலை மற்றும் ரஞ்சித் சிங் சாலை ஆகிய மாற்று வழிகளைப் பயன்படுத்த போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.
53 minutes ago | 2
4 hour(s) ago | 3
8 hour(s) ago