உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுழல் விளக்குடன் சுற்றி வந்த பயிற்சி அதிகாரியின் கார் பறிமுதல்

சுழல் விளக்குடன் சுற்றி வந்த பயிற்சி அதிகாரியின் கார் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: மஹாராஷ்டிராவில், பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பூஜா கேத்கர், 34, எவ்வித அனுமதியின்றி சிவப்பு - நீல சுழல் விளக்குடன், 'ஆடி' சொகுசு காரில் வலம் வந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பூஜா கேத்கர். இவர், யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில், 821-வது இடத்தைப் பெற்றார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த வர், புனேவில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளையும், சில ஆடம்பர வசதிகளையும் இவர் அத்துமீறி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.குறிப்பாக, தன் ஆடி சொகுசு காரில் மஹாராஷ்டிரா அரசு என்ற பெயர் பலகையும், சிவப்பு - நீல நிற சுழல் விளக்குடன் வலம் வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு இத்தகைய சலுகைகள் அளிக்கப்படாத நிலையில், உரிய அனுமதி யின்றி பூஜா பயன்படுத்தியது தெரியவந்தது.இதையடுத்து, அவர் புனேவில் இருந்து வாஷிம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் பூஜா கேத்கர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரித்து உண்மையைக் கண்டறிய, மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது.இதற்கிடையே, ஆடி காரில் சுழல் விளக்கு பயன்படுத்தியது தொடர்பாக புனே வட்டார போக்குவரத்து அலுவலகம் அந்த காரின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.இது, தனியார் நிறுவனத்தின் பெயரில் இருந்ததாக தகவல் வெளியானது. எனினும், அந்த காரை, பூஜா பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.இதையடுத்து, எவ்வித அனுமதியும் இன்றி சிவப்பு - நீல நிற சுழல் விளக்குகளை பயன்படுத்தியதற்காக அந்த காரை, போலீசார் பறிமுதல் செய்ததுடன், அந்த காரின் ஆவணங்களை சரிபார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ