உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: அமல்படுத்த தீவிரம் காட்டுது மத்திய அரசு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: அமல்படுத்த தீவிரம் காட்டுது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து, 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக இந்த, 100 நாட்களில் ஒவ்வொரு துறையும் ஆலோசனை நடத்தி, தங்களுடைய பரிந்துரைகளை அளித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4lwpbx8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இது தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:

பார்லிமென்ட், சட்டசபை மற்றும் மாநாகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, தன் பரிந்துரைகளை அளித்துள்ளது.இந்த முறையை, இந்த ஆட்சிகாலத்துக்குள் அமல்படுத்த மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதும், சமீபத்தில் செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழா உரையின்போதும், பிரதமர் நரேந்திர மோடி இதை வலியுறுத்தினார்.இது தொடர்பாக, சட்டக் கமிஷன் தன் பரிந்துரைகளை விரைவில் அளிக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆட்சி காலத்துக்குள் இதை நடைமுறைபடுத்தி, 2029 தேர்தலில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்க மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் துவக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரூ. 3 லட்சம் கோடி திட்டங்கள்

பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள தே.ஜ., கூட்டணி அரசு, முதல், 100 நாட்களில், மஹாராஷ்டிராவில் வாத்வான் துறைமுகம் அமைப்பது, 25,000 கிராமங்களில் 62,500 கி.மீ., தொலைவுக்கு சாலை வசதி ஏற்படுத்துவது உட்பட, மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கான உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தி.ச.திருமலை முருகன்
செப் 16, 2024 11:32

ஒரே நாடு ஒரே தேர்தல் போல் இந்தியா முழுவதும் ஒரே மதுவிலக்கு திட்டமும் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்திட வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 16, 2024 14:27

இரண்டுமே மாநில அரசின் பொறுப்பிலுள்ளவை. மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. மீறி தலையிட்டால் உடனே மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக கருப்பு பலூன்கள் பறக்கும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 10:04

எங்க சர்வாதிகார புலிகேசி மன்னர் வண்டியில அப்பப்போ கொள்ளி குச்சியை நீங்கள்லாம் நுழைத்துப் பார்ப்பது அவருக்கு முட்டுக்கொடுக்குற மூர்க்க பிரதர்ஸ் க்கு எரிச்சலா இருக்குது ..... பக்கோடாஸ் ன்னு வயிறெரிஞ்சு சாபம் கொடுக்குறாங்க ..... பார்த்து பண்ணுங்க மோடி ஜி .....


Ms Mahadevan Mahadevan
செப் 16, 2024 09:49

ஆரம்பத்தில் அப்படித்தானே இருந்தது. எல்லாம் அரசியல் சுக வாசிகளால் தான் சீரழிந்தது. இந்திய ஒரே நாடுதான் . சும்மா ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பஞ்ச் டயலாக் வெண்ட்டம். நாட்டுக்கு முக்கிய நீர் பாசன தேவைகள் மருத்துவ வேதி லஞ்ச மற்ற நிர்வாகம் ஆகியவைகளுக்கு முன் உரிமை கொடுத்து கொண்டு வர பார்க்கவும். சும்மா விளம்பர அரசியல் வேண்டாம்.


N.Purushothaman
செப் 16, 2024 09:29

திருட்டு திராவிடன்ல்ல அப்பன் ஒரே நாடு ஒரே தேர்தல் தான் சரி என்றும் மவன் அது தப்பு என்று எதிர்த்து அதையே உருட்டுவது தமிழ்நாட்டுல சகஜம் .... ஓல்ட் இருநூறு ஊவாய் வாலாவும் தற்கால இருநூறு ஊவாய் வாலாவுக்கும் தான் கஷ்டம் .....பாவம்யா அவனுங்க ....


GMM
செப் 16, 2024 09:20

ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். நேரம் , பணம் , இரட்டை வாக்கு குறையும் . வாக்காளர் எண் ஆதார் , வருமான வரி , வங்கி வாடிக்கையாளர் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஒரு வாக்காளர் ஒரு ஓட்டு அதாவது நாடாளுமன்ற ,சட்ட மன்ற ,நகராட்சி தேர்தலை ஒரே நாளில் நடத்தி ஒரு வாக்கு பதியும் வாய்ப்பு. இந்தியாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் மதம் சாதி அடிப்படியில் வாழ்கின்றனர். அதிக எண்ணிக்கை மக்கள் ஆதிக்கம் செலுத்துவது குறையும். அல்லது மக்கள் தொகை கட்டுப்பாடு கட்டாயம். வாழ்நாளில் 18 வயதிற்கு பின் 8 முறை மட்டும் வாக்களிக்க உரிமை. வாக்காளர் , வேட்பாளர் தகுதி நிர்ணயிக்க வேண்டும். தேர்தல் முடிந்தால் பின் கட்சி கூட்டம் பொது வெளியில் கூடாது. தேர்தல் தேதிக்கு பின் மட்டும் பிரச்சாரம். கட்சி பணம் பொது மக்கள் பணம் என்பதால் தேர்தல் ஆணையர் கூட்டு பொறுப்பில் இருக்க வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 16, 2024 09:20

ஆண்டு முழுவதும் எங்காவது தேர்தல் ஏற்பாடுகள் இருப்பதால் தேர்தல் நடைமுறை விதிகள் தொடர்ந்து அமலிலுள்ளன. அதனால் அரசு கொள்கை முடிவுகளை எடுப்பது தடைபடுகிறது. டெண்டர்கள் தாமதம். சட்டங்களை நிறைவேற்ற சட்டசபை பார்லிமென்ட் கூட்டங்கள் நடக்க இடைஞ்சல். இதையெல்லாம் விட பண்டிகை விசேஷ purchase க்கு பணம் எடுத்துச் செல்வதிலும் சாதாரண பொது மக்களுக்கு பிரச்சினைகள். கூலி ஆட்கள் ஊர்வலம் பொதுகூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதால் விவசாயம் கட்டுமானத் தொழில் பாதிப்பு. போக்குவரத்து நெரிசல். இன்னும் பலப்பல பின்னடைவுகள். இதற்கெல்லாம் ஒரே காலகட்டத்தில் தேர்தல் என்பதை தவிர வேறு தீர்வில்லை


பாமரன்
செப் 16, 2024 08:55

இந்தியாவை பொறுத்தவரை இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியா வல்லரசாகும் மாதிரியான கோஷமாதான் கடைசிவரை இருக்கும்... வேற சூடான டாபிக் இல்லாதபோது நடுநடுவே பேசுபொருளாக ஆக்கப்படும்... பின்னர் இன்டர்வெல் விடப்படும்...அவ்வளவுதான்


ديفيد رافائيل
செப் 16, 2024 08:12

கண்டிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரனும். பணமும் நேரமும் மிச்சமாகும், அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறைய வாய்ப்பிருக்கு.


சமீபத்திய செய்தி