உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலில் விழ போட்டா போட்டி பிரமுகர்கள் மீது முதல்வர் கோபம்

காலில் விழ போட்டா போட்டி பிரமுகர்கள் மீது முதல்வர் கோபம்

பெங்களூரு: காங்கிரஸ் பிரமுகர்கள், தன் காலில் விழ முட்டி மோதியதால், முதல்வர் சித்தராமையா கடுப்படைந்து திட்டினார்.முதல்வர் சித்தராமையாவை சுற்றி காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் இருப்பர். அவரது காலில் விழுவதை அதிர்ஷ்டவசமாக கருதுவோரும் உண்டு. முதல்வர் சித்தராமையா, தன் அலுவலகமான கிருஷ்ணாவில், மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். முதல்வர் வந்திருப்பதை அறிந்த காங்கிரஸ் பிரமுகர்கள், கிருஷ்ணா அலுவலகத்தை மொய்த்தனர்.கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், அவரது காலில் விழுந்து வணங்க பிரமுகர்கள் முட்டி மோதினர். மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா. வயதில் மூத்தவர். இவரது காலில் விழுந்து வணங்குவதில் தவறு இல்லை. ஆனால் பிரமுகர்கள், தொண்டர்கள் தன் காலில் விழுவதில், அவர் விருப்பப்படவில்லை.முதன் முறையாக, முதல்வர் பதவிக்கு சித்தராமையா வந்த போதே, அவர் இது பற்றி அறிவுறுத்தினார். ஆனால் தொண்டர்கள் கேட்பது இல்லை. நிகழ்ச்சியோ, கூட்டமோ முதல்வரை கண்டதும், காலில் விழுகின்றனர். நேற்றும் கூட கிருஷ்ணா அலுவலகத்தில், பிரமுகர்கள் போட்டி போட்டுக்கொண்டு, முதல்வரின் காலில் விழுந்தனர். இதனால் எரிச்சலடைந்த முதல்வர், பிரமுகர்களை திட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை