உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது முதல் கன்டெய்னர் கப்பல்

விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது முதல் கன்டெய்னர் கப்பல்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அமைந்துள்ள அதானி துறைமுகத்துக்கு, முதல் முறையாக பிரமாண்ட கப்பல் நேற்று வந்து சேர்ந்தது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள விழிஞ்ஞத்தில், அதானி குழுமம் சார்பில் பிரமாண்ட துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.பிரமாண்ட கப்பல்கள் நிறுத்தும் வசதியுடன் உள்ள இந்த துறைமுகம், சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில், துறைமுக வர்த்தகத்தில் ஆறு அல்லது ஏழாவது இடத்துக்கு இந்தியா முன்னேறுவதற்கு இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும்.ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த, 'மெர்ஸ்க்' எனப்படும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின், பிரமாண்ட சான் பெர்னாண்டோ சரக்கு கப்பல், அதானி துறைமுகத்துக்கு நேற்று வந்தது.இதில், 2,000 கன்டெய்னர்கள் இடம் பெற்றுள்ளன. முதல் முறையாக வந்துள்ள பிரமாண்ட கப்பல் என்பதால், அதற்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது.மாநிலத்தின் துறைமுக அமைச்சர் வி.என்.வாசவன் உள்ளிட்டோர் அதை வரவேற்றனர். அதிகாரப்பூர்வமான வரவேற்பு விழா இன்று நடக்க உள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய துறைமுக அமைச்சர் சர்பானந்த சோனவால், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.துறைமுகத்தின் முதற்கட்ட பணிகளும் இன்றுடன் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரஉள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட பணிகள், 2028க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:49

கன்னியாகுமரி மாவட்டம் இணையம் துறைமுகத் திட்டத்தை பாதிரியார்கள் தூண்டுதலில் எதிர்த்து நிறுத்திவிட்டனர் இந்த கேரள துறைமுகத்தையும் முக்கிய சர்ச்கள் எதிர்த்து போராட்டம் நடத்தின. ஆனால் கேரள கம்யூனிஸ்டு அரசு அடானியிடம் கெஞ்சி விரைவில் முடித்து விட்டது. இப்போ CPM முதலாளித்துவம் பற்றிப் பேசாது. ஐரோப்பிய எஜமானர்கள் நலனுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மவுனம்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:44

இதனால் யாருக்கு அதிக பலன்? கம்யூனிஸ்டு அரசுக்கா? அவர்களது எதிரி அடானிக்கா? பொதுத்துறை நிறுவனங்களை மோடி விற்கிறார் என்று இனி பேச முடியுமா?இன்றைய துவக்கவிழா விளம்பரத்தில் அடானி போர்ட் நிறுவனத்தின் பெயர்தான் முதன்மையாக இடம் பெற்றுள்ளது வேடிக்கை.


தென்காசி ராஜா ராஜா
ஜூலை 12, 2024 09:02

கேரளா கார்ன் விவரமான ஆளு துறைமுகத்துக்கு உருவாக்க தேவையான கணிமவளங்கள் முழுவதும் தமிழ் நாட்டில் இருந்து.அங்கே ஒரு ஜல்லி கல் கூட எடுக்க கூடாதுன்னு உத்தரவு


வாய்மையே வெல்லும்
ஜூலை 12, 2024 08:02

தமிழ்நாட்டு திராவிடர்கள் கண்களில் அதானி அம்பானி குர்பானி மஸ்தானி வெங்காயம் பாட்டு சத்தம் ஜோரா கேட்கும்.. உங்களின் ஆழ்ந்த கருத்துள்ள கேள்வியை கேட்கவேண்டிய இடம் கம்யூனிஸ்டு ஆட்சி நடப்பது எண்டே கேரளத்தில்.. உங்க தோழமை கட்சி தமிழக கம்யூனிஸ்டை கேள்விகேட்க சொல்லுங்க பாப்போம் ??


இறைவி
ஜூலை 12, 2024 05:57

இதனால் திருவனந்தபுரம் பெரும் பொருளாதார வளர்ச்சி பெறும். மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் நாம் கன்னியாகுமரியில் துறைமுகம் கொண்டுவர முயற்சித்தபோது எதிர்ப்பு கொடி பிடித்தோம். தமிழ் நாட்டிற்குள் எந்த ஒரு பெரும் தொழிலும் வரவிட மாட்டோம். ஆனால் மத்திய அரசு நமக்கு வரி வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். திராவிட கழகங்கள் இங்கு இருக்கும் வரை தமிழகம் வளராது. அப்படி வளர்ந்தாலும் அது தனியாரின் முன்னெடுப்பால்தான் இருக்கும். கழகங்களின் கொள்கை அரசியல் கொள்ளை அடித்து, அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கொண்டு ஓட்டுகளை விலைக்கு வாங்கி தேர்தலில் வெல்வது.


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 12, 2024 07:31

இதனை புரிந்துகொள்ளும் மனநிலையில் கன்யாகுமரி மக்கள் இல்லை, மூளை சலவைசெய்யப்பட்டு திருடர்களுக்கு திரும்ப திரும்ப வோட்டை மத வெறியால் கண்களை மூடிக்கொண்டு போடுகிறார்கள்.


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:22

சிறப்பு. சரக்குப்போக்குவரத்தில் இது ஒரு புதிய மைல் கல் என்றே சொல்லலாம்.


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:50

அப்போ சரக்கு விலை குறையுமா? பாட்டிலுக்கு எக்ஸ்ட்ராவா கேக்க மாட்டாங்களா?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 12, 2024 03:11

தமிழகத்தில் வரவேண்டிய துறைமுகம், அறிவு கேட்ட மத மாற்ற வெறியர்களால் கேரளாவிற்கு சென்றுவிட்டது.


மேலும் செய்திகள்