உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு பாதிப்பு பகுதிகளில் மனமுடைந்து அழுத அமைச்சர்

வயநாடு பாதிப்பு பகுதிகளில் மனமுடைந்து அழுத அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு : கேரளாவின் வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளில் வீடு, உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சசீந்திரன் திடீரென மனமுடைந்து அழுதார்.கேரளாவின் வயநாட்டில், ஜூலை 30ம் தேதி கனமழையுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சூரல்மலை, முண்டக்கை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை, 225 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; 130 பேரை காணவில்லை.பாதிக்கப்பட்ட பகுதியில் ராணுவத்தினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் அங்கு, மாநில வனத்துறை அமைச்சர் சசீந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வீடுகள், உறவினர்களை இழந்து வாடும் அப்பகுதி மக்களை தேற்ற முடியாமல் அவர் மனம் உடைந்து அழுதார்.பின் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேசிய அவர், “இப்படி ஒரு காட்சியை பார்ப்பேன் என வாழ்நாளில் நினைத்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ''அவர்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அவர்களின் வாழ்க்கையை கட்டமைக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சொந்தங்களை இழந்த அவர்களுக்கு மிக கடினமான நேரத்தில் கேரள அரசு முழு உதவியாக இருக்கும் என உறுதி கூறுகிறேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Swaminathan L
ஆக 12, 2024 18:35

இயற்கையை மதிக்கவில்லை, ரட்சிக்கவில்லை என்றால் ஒரு நாள் அது நம்மை ரடசிக்காமல் போகும். பிற்காலத்தை, பின் சந்ததிகளைப் பற்றிய அக்கறையோ, பொறுப்போ இல்லாமல் இன்றைக்கு என்னென்ன செய்தாவது ஏகத்திற்குச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இயற்கையை சீரழிக்கும் காரியங்களைச் செய்தால் அது நமக்கே சீரழிவைக் கொண்டு வரும்.


N DHANDAPANI
ஆக 12, 2024 15:40

சுசீந்திரன் ஐயா அவர்களே தாங்கள் அழுவது நியாயம் தான் நாங்களும் உங்கள் துக்கத்தில் பங்கேற்கிறோம் ஆனால் தாங்களும் தங்களது அரசியலாரும் தங்களது அலுவலர்களும் மக்களிலும் சிந்திக்கதமிழில் ஒரு பழமொழி உள்ளது பிறருக்கு இன்னா முற்பகல் செய்யின் தனக்கு என்ன பிற்பகல் தானே வரும் என்பதுதான் அது இதை சிந்தித்துப் பாருங்கள் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை தடுத்து தடுத்து குறைத்து குறைத்து ஏன் உங்களை வெள்ளை காட்டில் வைத்திருக்கிறீர்கள் மழை பெய்கிறதோ அங்கெல்லாம் சிறு வாய்க்கால்கள் அமைத்து எங்கள் பகுதிக்கு நேரத் திருப்பி விடுங்கள் ..................நாங்கள் மழை நீரும் பாசன நீரும் நிலத்தடி நீரும் குடி நீரும் இல்லாமல் அண்டை மாநிலத்து அப்பாவி மக்கள் அனைவரும் படும் வருத்தம் உங்களை இன்று இல்லாவிட்டால் என்று ஒரு நாளாவது பாதிக்கும் என்பதை மனதில் வையுங்கள் ...............இந்த கொடுமையான நிகழ்வுக்கு பின்னால் கூட மலையில் நீரை சேர்ப்பதனால் தான் பிரச்சனை என்று நீங்கள் பேசுவது உங்களுடைய எதிர்காலத்தை இன்னமும் இருட்டடிக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வருத்தப்படுகிறோம். எங்கள் வாழ்க்கைக்கு நீர் அளித்தால் உங்கள் வாழ்க்கை சுபிட்சம் அடையும்


Ram pollachi
ஆக 12, 2024 15:21

கம்பம் தேனி எல்லையோர தமிழக வனத்தை ஆக்கிரமித்த கேரள மக்களை உடனடியாக காலி செய்ய வைக்கவும் இல்லையென்றால் மீண்டும் கண் கலங்க வேண்டி வரும்.


Rasheel
ஆக 12, 2024 11:15

மலை சரிவுகளில் தேயிலை தோட்டம் அமைத்தால் இது தான் இயற்கை கொடுக்கும் கொடூரமான பரிசு. மணல் சரிவை தடுத்து நிறுத்தும் அடர்ந்த மரங்களை அழித்து விட்டு வீடு கட்டி, சுற்றுலா தலம் அமைத்த பின் என்ன செய்ய?


Duruvesan
ஆக 12, 2024 08:33

commis காலம் முடிந்தது. அதுக்கு தான் நாடகம்


N.Purushothaman
ஆக 12, 2024 06:37

எவ்வளவு இயற்க்கை பேரிடர்கள் வந்து பாடம் கற்று கொடுத்து சென்றாலும் அதில் இருந்து அரசியல்வியாதிகள் கற்றுக் கொண்டனரா என்பது தான் கேள்வி ... எங்கு பார்த்தாலும் சட்ட மீறல், லஞ்சம், ஊழல், பேராசை என அனைத்து தீய குணங்களும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி போய்விட்டன.. புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கைப்படி அவர்களே எதிர்பாராத அளவிற்கு நிலச்சரிவு பல மடங்கு வேகமாக நடந்துள்ளது அவர்களுக்கே அதிர்ச்சி அளித்துள்ளது என்றால் எந்த அளவிற்கு இயற்கையை நாசம் படுத்தி உள்ளோம் என்பது தெளிவு ....


Ramona
ஆக 12, 2024 06:21

இருக்கும் போது ஒரு நல்ல காரியமும் செய்யாமல், அவர்கள் இறந்து பிறகு அழுது,ஓலமிட்டு, என்ன பயன்.


Kasimani Baskaran
ஆக 12, 2024 05:05

மலையிலிருந்து நீர் வழிந்தோடும் பாதைகளில் ஏராளமான அளவில் மண்ணரிப்பு சாத்தியம் என்பது அனைவருக்கும் தெரியும். கேரள அரசுக்கு தெரியாமல் போனது துரதிஷ்டம்.


Sathyanarayanan Sathyasekaren
ஆக 12, 2024 04:16

இது இயற்கையால் ஏற்பட்ட பேரழிவே, ஆனால் பங்களாதேஷில் மதவெறியால் ஒரு கும்பல் ஹிந்துக்களை அந்நியமாக கொன்றும், அவர்களது சொத்தை அளித்துக்கொண்டும் இருக்கிறது. அவர்களுக்காக அழ ஒரு அரசியல் வியாதிக்கும் மனமில்லை. ஏனென்றால் அவர்கள் ஹிந்துக்கள், கத்திக்கு பயந்து முஸ்லீம் மதம் மாறியவர்களுக்காக அழும் இவர்கள், ஹிந்துக்களுக்கு எது நடத்தலும் வாய் கூட திறக்கமாட்டார்கள் .


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை