உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஞானவாபி மசூதி இருக்கும் இடம் சிவன் கோவிலுக்கு சொந்தமானது; உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு

ஞானவாபி மசூதி இருக்கும் இடம் சிவன் கோவிலுக்கு சொந்தமானது; உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு

வாரணாசி: வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்திருக்கும் இடத்தில் முன்பு, சிவன் கோவில் இருந்ததாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் தெரிவித்துள்ளார். கோரக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், 'எதிர்பாராத விதமாக பொதுமக்கள் ஞானவாபியை மசூதி என்று அழைக்கின்றனர். ஆனால், உண்மையில் அது கடவுள் சிவனின் தலம். இங்கு நிலவும் குழப்பம், வழிபாடு நடத்துவதற்கு மட்டுமின்றி, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் தடையாக இருப்பதாக பக்தர்கள் வருந்துகின்றனர். கடந்த காலத்திலேயே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டிருந்தால், தற்போது காலனி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டு இருந்திருக்க மாட்டோம்,' எனக் கூறினார். ஞானவாபி மசூதி இருக்கும் இடம் இந்து கோவில் இருந்ததாகவும், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளன. அதில், கடந்த பிப்ரவரி மாதம், ஞானவாபி மசூதியின் வியாஸ் அடித்தள அறையில் இந்துக்கள் பூஜைகள் செய்யலாம் என்று வாரணாசி கோர்ட் தீர்ப்பை வெளியிட்டது. அந்தத் தீர்ப்பை தொடர்ந்து, பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை