மேலும் செய்திகள்
தேசிய நலன் மீதான பற்றால் உச்சத்தை தொட்டவர் பிரதமர் மோடி; அமித் ஷா
2 hour(s) ago | 1
இளம்பெண் தற்கொலை முயற்சி
3 hour(s) ago
சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
3 hour(s) ago
தாவணகெரே : தாவணகெரே தொழில் அதிபர் மகன் 18 வயதில், துறவறம் பூண்டுள்ளார்.தாவணகெரே டவுனில் வசிப்பவர் மகாவீர் ஜெயின். தொழில் அதிபரான இவர், வக்கீலும் ஆவார். இவருக்கு மூன்று மகன்கள். கடைசி மகன் மயங்க் ஜெயின், 18. இவர் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. ஆனாலும் கடவுள் பக்தியால், துறவறம் மேற்கொள்ள இருப்பதாக பெற்றோரிடம், அவர் கூறினார். இதற்கு அவர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், தாவணகெரே பி.பி.,சாலையில் உள்ள திருமண அரங்கில் வைத்து, ஜைன சமூக சுவாமிகள் முன்னிலையில், நேற்று முன்தினம் மயங்க் ஜெயின் துறவறம் பூண்டார். முன்னதாக வீட்டில் இருந்து திருமண அரங்கிற்கு, விலை உயர்ந்த காரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.துறவறம் பூண்ட பின்னர், அவருக்கு மொட்டை அடிக்கப்பட்டது. அதன்பின்னர் வெள்ளை உடை அணிவிக்கப்பட்டு, துறவி வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் அவருக்கு வழங்கப்பட்டன. மேலும் அவரது பெயர் 'ரத்ன தன விஜயாஜி' என்று மாற்றப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை தாவணகெரேயில் இருந்து மும்பைக்கு, பாதயாத்திரையாக புறப்பட்டார்.
2 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago