உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதைத்த உடல்களை தோண்டி தீயிட்டு எரித்த கிராமத்தினர்

புதைத்த உடல்களை தோண்டி தீயிட்டு எரித்த கிராமத்தினர்

ஹாவேரி, : புதைக்கப்பட்ட சடலங்களை எரித்தால் மழை வரும் என்ற மூடநம்பிக்கையில், இடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை வெளியே எடுத்து, மீண்டும் எரித்த வீடியோ பரவி வருகிறது.தொடர்ந்து வறட்சி ஏற்பட்டால், தவளைகள், கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற மூடநம்பிக்கை உள்ளது. ஹாவேரியில், இதற்கு ஒருபடி மேலேயே சென்றுள்ளனர்.ஹாவேரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி, விளைச்சல்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் மண்ணில் புதைக்கப்பட்டதால் தான், மழை பெய்யவில்லை என்று சில கிராமத்தினர் நம்புகின்றனர்.இதையடுத்து, தோல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த, எட்டு முதல் பத்து உடல்களை வெளியே எடுத்த கிராமத்தினர், அதை எரித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இந்த நுாற்றாண்டில் இருந்தும் கூட, இன்னமும் மூடநம்பிக்கையுடன் செயல்படுவதை பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உரிய அனுமதியின்றி உடல்களை வெளியே எடுத்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 10:20

மூட நம்பிக்கையா? காட்டுமிராண்டித்தனமா? இதை தும்மீலு நாட்டு அர்பன் நக்சல்கள் ஏன் கண்டிப்பதில்லை??


மேலும் செய்திகள்