உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

மும்பை: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் குடியாதேவி என்பவர் நேற்று முன்தினம் பிற்பகலில் 3வது மாடியில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பருடன் அவர் அரட்டை அடித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது விளையாட்டாக அந்த பெண்னை அந்த ஆண் கட்டிபிடித்தார். இதில் நிலைதடுமாறிய அந்த பெண் 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரது நண்பர், சுவரை பிடித்துக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். 3வது மாடியில் இருந்த விழுந்த பெண் உயிரிழந்தார். பதை பதைக்கும் இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.,யில் பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை