உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனியார் விசைத்தறி பூங்காவில் திருட்டு

தனியார் விசைத்தறி பூங்காவில் திருட்டு

தங்கவயல்: தங்கவயல் தனியார் விசைத்தறி பூங்காவில், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின் பொருட்கள் திருடப்பட்டு உள்ளன.மாரிகுப்பம் ராஜர்ஸ் கேம்ப் அருகில் சித்தே கவுடன ஹள்ளி என்ற இடத்தில், தனியாருக்கு சொந்தமான, 'விசைத்தறி பூங்கா' புதிய தொழிற்சாலைக்கான கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமான பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளன.கட்டுமான பணிகளுக்கான மின் கம்பிகள், மின் ஒயர்கள், இரும்பு பைப்கள் ஆகியவை நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.கட்டட ஒப்பந்ததாரர் அரவிந்த் கவுடா, ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை