உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு நடைமுறையில் தோல்வி இல்லை: உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

நீட் தேர்வு நடைமுறையில் தோல்வி இல்லை: உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு, ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையின் தோல்வி அல்ல; தேர்வை குறை கூறுவதற்காக அரங்கேற்றப்பட்ட சதி' என, சி.பி.ஐ.,தெரிவித்துள்ளது.கடந்த மே 5ல் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள், தேர்வுக்கு முன் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆள்மாறாட்டம் உட்பட பல்வேறு மோசடிகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஆறு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது.பட்டியல்விசாரணையின் விரிவான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., சமர்ப்பித்துள்ளது. அது குறித்து சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:வினாத்தாள் வெளியானது எப்படி, எப்போது வெளியானது, எவ்வளவு நேரம் அது வெளியே சுற்றி வந்தது, அதனால் பலன் அடைந்தவர்கள் யார் என்பது குறித்து, 100 சதவீத உறுதியான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.இதனால் பலன் அடைந்தோர் பட்டியலை, வரும் 17ம் தேதி விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். பலன் அடைந்தோர் எண்ணிக்கை, 100க்கும் குறைவாகவே உள்ளது.எங்கள் இறுதி விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதன் பின் நீதிமன்றம் முடிவெடுக்கும்.குற்ற செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இந்த முறைகேடுகளில் ஈடுபடவில்லை. சில தனிநபர்களே இதை செய்துள்ளனர். ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட சிலரும் உடனடியாக பிடிபட்டனர். இதனால் தேர்வின் ஒட்டுமொத்த நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.மேலும், வினாத்தாள் அச்சிடப்படும் அச்சகங்கள் பாதுகாப்பானது என்பதையும் உறுதி செய்துள்ளோம். அதன் வழியே வினாத்தாள்கள் கசியவில்லை.நோட்டீஸ்ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையையும் சீர்குலைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே வழக்காக விசாரிக்கக் கோரி, தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mohammed Ali
ஜூலை 16, 2024 20:51

இட் ஐஸ் இன்டர்நேஷனல் போரெஜெரி. மேக் நியூ exam


Kandeepan
ஜூலை 16, 2024 10:25

நீட் எழுத அந்தமையத்துக்குள் செல்லும் போது தாலிய கழட்டிடனும், பட்டன், பாக்கெட் வச்ச, டார்க் கலர் துணிமணிகள் ஏதும் போடக்கூடாது தண்ணீர் பாட்டிலில் ஸ்டிக்கர் இருக்கக்கூடாது இத்தமிழ்நாட்டுக்கு மட்டும். ஆனால் வட மாநிலத்தில் துட்டு கொடுத்தால் போதும் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படிக்கலாம்.


Sampath Kumar
ஜூலை 16, 2024 09:42

நடை முரியில் தோல்வி இல்லையாம் கேளுங்க மக்களே தோல்வி ஆனதால் தானே கோர்ட்டுக்கு மக்கள் வந்து உள்ளார்கள் என்ன பதில் மக்கள் எல்லாம் என்று நினைக்கிறது சிபிஐ


Mario
ஜூலை 16, 2024 09:30

அப்படித்தானே சிபிஐ சொல்லும்


Narayanan Muthu
ஜூலை 16, 2024 08:09

ஆமாம் மீசையிலே மண் ஓட்டவேயில்லை. கூச்சமே இல்லாமல் பொய் சொல்ல பஜேபியிடம் பாடம் படித்தார்கள் போல


தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2024 02:00

நீட் தேர்வு சூப்பராக செயல்படுகிறது. வெற்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளின் சதிவேலை. மாணவர்களை தற்கொலைக்கு தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். துடைத்துபோட்டுவிட்டு சுப்ரிம்கோர்ட் வேறுவேலையை கவனிப்பது நல்லது.


Bhairava Bhairava
ஜூலை 16, 2024 18:14

ஊழலுக்கு ஆதரவான கருத்து இது


மேலும் செய்திகள்