உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைவரும் இணைந்து செயல்படுவதால் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை இல்லை

அனைவரும் இணைந்து செயல்படுவதால் நாட்டின் எதிர்காலம் குறித்த கவலை இல்லை

கும்லா: ஜ-ார்க்கண்ட மாநிலம் கும்லாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:வளர்ச்சி மற்றும் மனிதர்களின் லட்சியங்களுக்கு என, எந்த ஒரு வரையறையும், எல்லையும் கிடையாது. அதனால், மனிதகுலத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் அயராது உழைக்க வேண்டும். நம்முடைய நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற இயற்கை குணத்தை நமக்கு கொடுத்துள்ளது. இந்த குணம், நமக்கு வயல் வெளிகளில் இருந்தும், காடுகளில் இருந்தும் கிடைத்துள்ளது. இதில் இருந்துதான், சனாதன தர்மம் உருவானது. சனாதன தர்மம் என்பது அரசர்களின் மாளிகைகளில் இருந்து நமக்கு கற்றுத் தரப்படவில்லை. ஆசிரமங்களில் இருந்தும், காடுகளில் இருந்தும் கற்றுத் தரப்பட்டது.மற்றவர்களுக்கு உதவுவது என்பதுதான், சனாதன தர்மமாகும். மற்றவர்களின் நலனையும் பார்ப்பதுதான் சனாதன தர்மம். நம்முடைய உடை, நடை, வாழ்க்கை முறை மாறியிருக்கலாம். ஆனால், இந்த இயற்கையான குணம் மாறவில்லை.மாறி வரும் காலத்துக்கு ஏற்ப, மற்றவர்களுக்கு எப்படி உதவலாம் என்பதில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவது என்ற இயற்கை குணம் மாறவில்லை.நம் நாட்டில், 33 கோடி கடவுள்கள், 3,800 மொழிகள் என, பலவகையான மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்முடைய சிந்தனைகள் ஒன்றாக உள்ளது. அது, நாமும் வளர்ந்து, மற்றவர்களும் வளர்ச்சி அடைவதாக உள்ளது.இவ்வாறு ஒட்டுமொத்த நாடும் ஒரே சிந்தனையுடன் இருப்பதால், நம் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. கொரோனா காலத்தில், உலக நாடுகள், நம்முடைய இந்த குணத்தை பார்த்து ஆச்சரியப்பட்டன. நம்முடைய இந்த இயற்கையான குணமே, உலகின் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதை அவை உணர்ந்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி